அபுதாபி
அபுதாபி 7 மாகாணங்களை உள்ளடக்கிய வளைகுடா நாடுகளில் சிறந்த நாடாக விளங்குவது ஐக்கிய அரபு அமீரகம். இதில் வெளி உலகத்திற்கு மிகவும் தெரிந்த மாகாணம், துபாய். அதை தவிர மீதி 6 மாகாணங்கள் அபுதாபி, ஷார்ஜா, அஜ்மான், உம்மு அல் குன் , ரஸ் அல் கைமா மற்றும் புஜைரா . இதில் அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரம். அதை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பாலைவனத்தை சோலைவனமாக மாற்றி பொருளாதாரம், கல்வி, மருத்துவம், கலை, பாதுகாப்பு என்று அனைத்திலும் சிறந்து விளங்குகிறது. உள்நாட்டு பாதுகாப்பில் உயர்தரமான கட்டமைப்பை கொண்டிருந்தாலும், ஐடி மற்றும் கல்வியில் அண்மையில்தான் வளர்ச்சியை காண தொடங்கியுள்ளது. ஏழு மாகாணமும் தனித்தனி ராஜாக்களால் ஆளப்படுகின்றன. ஒவ்வொரு மாகாணமும் தனக்கென்று தனி சட்டங்களை வைத்திருந்தாலும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் தொலைத்தொடர்பு என்று சில துறைகள் எல்லா மாகாணத்திற்கும் பொதுவாகவே இருக்கிறது. புகையிலை மற்றும் மதுபானங்களை சில மாகாணங்கள் அனுமதிப்பதில்லை, சில அனுமதிக்கிறது. இதில் வளர்ந்த மாகாணமாக துபாய் தெரிந்தாலும், அபுதாபியின் அரசர் கை தான் பல விஷயங்களில் ஓங்கியிருக்கிறது. உலகத்தில் “முதன