அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2
நல்ல உறவுகளை சம்பாதிப்பது மிகவும் கஷ்டம், அதாவது தங்களிடம் உதவி கேட்பதற்கு முன்பே ஒருவர், நாம் கஷ்டப்படுவது அவனுக்கு தெரிந்தால் “அவனே உதவி இருப்பான்” என்று அவர்கள் மனதில் தோன்றும் அளவிற்கு நீங்கள் உறவுகளை சம்பாதித்து இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த உலகில் அப்படி யோசிக்கும் உறவுகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றால் விரல் விட்டு எண்ணலாம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. சிலர் உதவி என்று கேட்க வரும்போதே தங்களை தயார் செய்து கொண்டு வருவார்கள். அதாவது நீங்கள் நோ என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தில் அவர்கள் வருவதில்லை. இவர் நோ சொன்னால், அடுத்து இந்த உதவியை நாம் யாரிடம் கேட்கலாம் என்று அடுத்த கட்டத் திட்டம் வைத்திருந்தால், அவர்களுக்கு அத்தகைய எண்ணம் தோன்றாது. உங்களையே நம்பி வரும்போது, நீங்கள் சொல்லும் நோ அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. சரிதான். ஆனால் நாம் ஒரு சரியான காரணத்திற்காக நோ என்று சொல்லும்போது அவர்கள் எவ்வாறு அதை எடுத்துக் கொள்வார்கள், அவர்கள் அதை தவறாக எடுத்துக் கொண்டாலும் அதற்கு நாம் பொறுப்பில்லை தானே!! என்று நினைத்துக் கொள்ளுங்கள். நாம் வேண்டுமெ