கொரியாவின் கொசுறுகள்- பார்ட் 4
தெருவுடன் சேர்த்து நாய்களை மட்டுமே சொல்லி பழக்கமுள்ள நமக்கு, தெரு மாடுகள், தெருப்பன்றிகள் என்று சொன்னாலே வித்தியாசமாக இருக்கும். ஆனால், தெரு நாய்களே பார்க்க முடியாத ஊரில் தெருப்பூனைகள் அதிகம் திரிவதை காணலாம். Persian பூனைகள் எனப்படும் அவைகள், உடல் வாகே அப்படியா அல்ல வாக்காக நல்ல சாப்பிட்டு வளர்த்த உடம்பா என்று நின்று யோசித்து கடந்து செல்ல தோன்றும் அளவுக்கு குண்டு குண்டு பூனைகள்.. தெருநாய்கள் தான் கிடையாதே தவிர, பொம்மை தான் என்று அடித்து கூறும் அளவுக்கு அழகான உள்ளங்கை அளவு கூட உள்ள வீட்டு நாய்கள் ஏராளம். அதற்கு செய்யப்படும் பணிவிடை, நம் நாட்டு மாமியார் மாமனார்களுக்கு கிடைக்கிறதா என்பது சந்தேகம் தான். விதவிதமான விலையுயர்ந்த strollerகளில் அழைத்து வருவது குழந்தையை அல்ல, நாய்க்குட்டிகளை என்பது எட்டிப்பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். பல முறை கையில் தூக்கி வருவது பொம்மை என்று நினைத்து பார்க்க, திடீரென அதன் தலையை வெடுக்கென திருப்ப, அய்யயோ உயிர் இருக்கு என பதறியிருக்கிறேன். குழந்தை இல்லாத தம்பதியர்கள் நாய்களையே அவர்களின் பிள்ளைகளாக வளர்ப்பதாக கூறுகிறார்கள். வந்து சில மாதங்களே ஆன