கொரிய வளர்ச்சிக்கும் ஜப்பானிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்கோ !!!!! KOREAN HISTORY- A GLIMPSE
கொரிய தம்பதிகளின் குழந்தையின்மை சதவீதமும், விவாகரத்து சதவீதமும் அதிகரித்து வருவதாகவும், தென்கொரிய இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மாணவ பருவத்தில் சிறந்த கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற பெற்றொர்களின் திணிப்பும், கல்லூரி படிப்பை முடித்து வேலை செய்யும் இளைஞர்களுக்கு வேலையிடங்களில் தரப்படும் நெருக்கடிகளும் அவர்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாவதற்கான முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. அதை சரி செய்ய தற்போது தென் கொரிய அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. கொரியன்களுக்கு கட்டாய சனி, ஞாயிறு விடுமுறை அதில் குறிப்பிடத்தக்க ஒன்று. கொரிய திரைப்படங்களும், சிரீஸ்களும் உலகமெங்கும் பிரபலமாகிக் கொண்டிருக்க, நம்ம ஊரு "3 இடியட்ஸ்" கொரியாவில் மிகப் பிரபலம். பள்ளிகளில் பெற்றோர்களை அழைத்து இப்படத்தை திரையிட்டு காண்பிப்பதாக கூறுகிறார்கள். பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் மேல்குறிப்பிட்ட நெருக்கடிகள் தராமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு. வயதானவர்கள் ஒரு சிலர் தற்கொலை செய்வதற்கான முக்கிய காரணமாக கலாச்சாரம் வேறுபட்டு, வருமானம் இழந்த பெற்றொர்களை பிள்ளைகள்