Posts

Showing posts from April, 2021

கொரிய பயணம் - Part 2

இனி கதவை திறந்து வெளியே செல்ல முடியாது,14 நாள் குவாரண்டைன் என்பதால். முழு நீள பாதரசம் பூசாத கண்ணாடி கதவு கொண்ட பால்கனி வழியாக தெருவும், போய் வருபவர்களும் தெரிந்தது, மனதை லேசாக வருடியது. பால்கனியை திறந்தால், கைக்கு எட்டியது ஓர் கனி கொண்ட மரம். சமைக்க சாப்பிட சில பாத்திரங்களும், வரும் முன்னரே கொடுக்கப்பட்ட மளிகை சாமான் லிஸ்டில் இருந்து தேர்ந்தெடுத்திருந்த அத்தனை சாமான்களும், சோப், சாம்பு, டிஷ்வாஷிங் லிக்விட், டிடெர்ஜெண்ட் லிக்விட், பேஸ்ட், டவல் என அனைத்து சானிட்டரி ஐட்டங்களும், கொரியா வந்து ஆறு மாதங்கள் ஆகியும் இன்று வரை தீராத அளவிற்கு, யுனிவர்சிடி செலவில்  பக்காவாக வீட்டில் முன்னரே வைக்கப்பட்டிருந்தது. டின்னர் மட்டும் அவர்கள் தருவதாக கூறியிருந்தார்கள். பன்றி இறைச்சியும், மாட்டுக்கறியும் டின்னர் மெனுவில் இருந்ததால், வெஜிடேரியன் தேர்ந்தெடுத்தோம். வெஜிடேரியனில் மெனு எதுவும் குறிப்பிடப்படவில்லை. வைத்திருந்த மளிகை சாமானில் நம்மூர் மஞ்சள் பொடி, வத்தல் பொடி எதுவும் கிடையாது. நாங்கள் வந்தது வந்தே பாரத் மிஷன் fலைட் என்பதால், ஆளுக்கு 7 கிலோ மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. நாங்களும் எடுத்து வரவில