வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி
யாருடா அந்த வாசகர்கள்னு உங்களயே ஒருத்தர ஒருத்தர் மாத்தி கேட்டு டைம் வேஸ்ட் பண்றதுக்கு பதிலா, கீழ உள்ள போஸ்ட வாசிச்சு உங்க வாழ்க்கைல ஒரு நாள உபயோகமா செலவழிச்ச பெருமைய என்னால பெற்றுக்கோங்க. போங்க !!! தென் கொரியா பயணம். நினைத்துப் பார்க்கவே இல்லை. நினைத்து வைத்திருந்த இடங்களில் தென் கொரியா இருந்ததும் இல்லை. தென் கொரியா என்றதும், ஆ!! ஐயோ!! கொரியாவா? நான் கொரியன் சிரீஸ் ஒன்னு விடாம பாப்பேன்னு பேசிக் கொண்ட இளசுகள் கூட்டம் ஒரு பக்கம். வந்து ஆறு மாதங்கள் ஆகியும், இந்தியாவில் வைத்து பலரால் பரிந்துரைக்கப்பட்டு பார்த்த 'பாரசைட்' படம் தவிர வேறு ஏதும் பார்த்த நியாபகம் இல்லை. அதுவும் கொரியன் படம் என்பது பார்க்க ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது.. என்ன முக சைஸ் எல்லாம் இங்கிலீஷ்காரன் மாதிரி இல்லையே என்று சந்தேகம் வந்து கூகுளை தட்டிய போது தான் தெரிந்துகொண்டேன். மற்றொரு கூட்டம் கிளம்புவதற்கு அரை மணி நேரம் முன்னர் தான், போய் வருவதாக தகவல் தெரிவிக்கிறேன் என்று தெரிந்திருந்தும் 'கொரியா' என்றவுடன், கொரியாவா? அங்க இப்போ தான கொரோனா இருந்தவங்கள எல்லாம் சுட்டு தள்ளிட்டாங்கன்னு செய்தி படிச்