நவரசா…
நவரசா … மீண்டும் மீண்டும் வந்த விளம்பர த்தால் பயங்கர எதிர்பார்ப்புடன் நெட்ஃபிளிக்ஸில் ஆரம்பித்தேன். தொடங்கியதும் கண்ணில் பட்டவர் விஜய் சேதுபதி. பின்னர் இயக்கம் பிஜெய் நம்பியார்னு பார்த்ததும் இன்னும் சந்தோஷம். கேரளால பெரிய டைரக்டர்ங்க.. படம் சூப்பரா இருக்கும் போலயேனு நினைக்குறதுக்கு முன்னாடி , “ பார்த்தாங்க , ஆனா என்னை தான் பார்த்தாங்களானு தெரியலயே ”, “ எதாச்சும் பேசுப்பா .. பிடிக்கல சார் , உங்கட்ட பேச பிடிக்கல ” னு டையலாக்கு . இது என்ன மணிரத்தினம் படம் மாதிரி டையலாக்கு இருக் குனு நினைக்கும்போதே ஒருத்தர் சாக , அடுத்த காட்சியில் அவரே உயிரோடு வர ,.. மனசாட்சியை காமிக்குறாங்களாம் . முடியல .. என்ன ஒரு நிம்மதினா, 30 நிமிஷத்துல ஒரு எப்பிசோடு முடிஞ்சுருது. இல்லனா, எப்பவும் காமிக்குற கோவிலு, கர்ப்பிணி அக்கா, வளைகாப்பு, வைரமுத்து பாட்டுல புதுசா இரண்டு இலக்கிய தமிழ் வார்த்தை (நல்லை அல்லை), ஒரு கர்னாடிக் சாங்கு , அதிரப்பள்ளி ஃபால்ஸ், அம்பாசமுத்திரம் வயக்காடுனு கொன்னுருப்பாங்க… சரி, அடுத்த கதை நல்லா இருக்கும்னு பார்த்தா,