Posts

Showing posts from December, 2020

தில்லி சலோ - Unprecedented Farmer Protest

Image
மூன்று விவசாய மசோதாக்களை திரும்ப பெற ஆகஸ்டில் தொடங்கிய போராட்டம் இன்றளவும் அதன் தன்மை குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது . அப்படி அந்த மசோதாக்கள் என்னதான் சொல்கிறது , எதற்காக இத்தனை எதிர்ப்புகள் ? உண்மையில் விவசாயிகள் தான் இந்த போராட்டங்களை நடத்துகிறார்களா ? இல்லை , ஆளுங்கட்சி சொல்வது போல சீனா மற்றும் பாகிஸ்தானின் தூண்டுதலால் நடக்கிறதா ? விவசாயிகளை , காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று வர்ணம் பூச அரசாங்கம் நினைத்தது எதற்காக ? நிராயுதபாணிகளான விவசாயிகளை தாக்கியபோது இங்கிலாந்து , அமெரிக்கா , ஆஸ்திரேலியா , கனடா என்று உலக நாடுகள் கடுமையாக விமர்சித்தது ஏனோ ? முடிவுகள் தவறோ சரியோ , தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வரலாற்று சிறப்புவாய்ந்தவை என்று நம்பவைப்பதில் வெற்றிக்கொடி நாட்டியவர் மோடி என்பதை   நமது முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தோம் . மசோதாவை, விவசாயிகளுக்கான “பரிசு” என்று முதலில் கூறிய பிரதமர், பின்னர் அதையே “வரலாற்று” சிறப்புவாய்ந்த மசோதா என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  நடுத்தர மக்கள் மற்றும் , நடுத்தர   வாழ்வை