கருப்பு – நிற வெறி: Racism at Doorstep
திராவிடன், ஆரியன் என்று அரசியல் பேசும் பதிவு அல்ல இது. நம் தினசரி வாழ்வில் நம்மை அறியாமல் நாம் பேசும் வழக்கு மொழியை பிரித்து ஆராயும் ஒரு முயற்சியே இந்த பதிவு. கருப்பர்கள் என்று சொல்வதில் மட்டும் இல்லை நிறவெறி. கருப்பை வெறுப்போடு ஒதுக்கும் ஒவ்வொரு அசைவுகளிலும் இருக்கிறது நிறவெறி. அண்மையில், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாயிடு என்னும் கருப்பின இளைஞன் போலீசால் கொல்லப்பட்டதால், சமூக வலைத்தளங்களில் “BlackLivesMatter” என்ற ஹாஷ்டாக் பிரபலமானது. இந்த ஹாஷ்டாக்கை பதிவிட்டதில் எத்தனை பேர் தன் மகன்களுக்கு கருப்பு மருமகள்களை தேடுபவர்கள், எத்தனை இளைஞர்கள் தங்களுக்கு கருப்பு கேர்ள்ஃப்ரன்டை தேடுபவர்கள் என்று தெரியவில்லை.