எவ்வாறு ஏமாறுகிறோம், எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் - Humans Uncontrollable Irrational Behavior
பகுத்தறிவோடு முடிவெடுப்பதாக நினைத்து, நம்மை அறியாமல் சிக்கிக்கொள்ளும் தருணங்கள் பற்றிய பதிவுதான், “எவ்வாறு ஏமாறுகிறோம், எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம்” (எடுத்துக்காட்டாக திருமணம், சும்மா சொன்னேங்க). ஏதோ ஒருமுறை தெரியாமல் நடந்த ஏமாற்றத்தை பற்றியது அல்ல, ஒவ்வொரு முறையும் நாம் தெரிந்தே ஏமாறுவதை பற்றியது. பெரும் நிறுவனங்கள், உளவியல் ரீதியாக நம்மை ஆட்கொண்டு, அவர்களின் பொருட்களை வாங்க, நாம் வெளிப்படுத்தும் விருப்பத்தின் மூலம், தன் சந்தை மதிப்பை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். ஆப்பிள் முதல் மெக்டொனால்டு வரை இந்த சூட்சமத்தை எவ்வாறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்?, ஒரு பொருளுக்கு அவர்கள் நிர்ணயிக்கும் விலை தகுதியானதுதான் என்று நம்மை எப்படி நம்ப வைக்கிறார்கள்? ஒருமுறை பரவாயில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் எவ்வாறு ஏமாறுகிறோம்? இப்படி, பல கேள்விகளுக்கான விடையை பார்க்கலாம்.