THAPPAD – A SLAP – சவுக்கடி (தமிழ் ரீமேக்ல டைட்டில கொஞ்சம் அப்படி இப்படி மாத்திக்கலாம்)
அறிவியலில் “கியாஸ்” (CHAOS) என்று ஒன்றை சொல்வார்கள். அப்படினா, திருநெல்வேலியில் பட்டாம்பூச்சி சிறகடிச்சா, திருத்தணியில் புயல் அடிக்குமாம். ஒரு பெரிய விளைவுக்கு எங்கோ நடக்கும் சின்ன நிகழ்வு காரணமாய் இருக்கும் என்பது தான் அர்த்தம். உதாரணமாக, தசாவதாரம் படத்தின் தொடக்கத்தில் பெருமாள் சிலையை கடலில் போட, இதனால் கடலில் ஏற்படும் சிறு இடையூறுகள், படத்தின் முடிவில் சுனாமி வருவதுபோல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆமா, இதுக்கும் இந்த படத்திக்கும் என்ன சம்பந்தம்? பார்ப்பதற்கு சிறியதாக தெரியும் இந்த படத்தின் ஒரு காட்சியின் முடிவு, படத்தை மட்டுமல்ல சமுதயாத்தையே புரட்டி போடுவதாய் அமைகிறது. படம் தொடங்கி 5 நிமிஷம் போன style அ பாத்து , நெறய family கதைகள கனெக்ட் பண்ற ஒரு படமா இருக்கும் என்று கணித்தேன். ஆனா, படத்துல வார குடும்பங்கள் மட்டுமல்ல , ஊர் உலகத்துல உள்ள எல்லா குடும்பமுமே சம்பந்தப்பட்டிருக்குனு படம் interval க்கு முன்னாடியே நாம தெரிஞ்சுக்கிடலாம். ரொம்ப ஸ்லோ தான். ஆனாலும் ஒரு சீன் கூட மிஸ் பண்ண முடியல. ஆடுகளத்துல அழகா அரவமே இல்லாம வந்துட்டு போன தப்ஸி பண்ணு , ஸாரி , பொண்ணு. Actually,