எம் எல் ஏக்கள் தொகுதிகளுக்கு வராதது ஏன் - Small Calculation on MLA's constituency visit
“தேர்தல் வந்தா மட்டும் தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் எம்எல்ஏ, மத்த
நேரம் இந்த பக்கம் தல வச்சு கூட படுக்குறது இல்ல”
மக்கள் அரசியல்வாதிகளை இப்படி குறை கூறுவது வழக்கம். எவ்வளவுதான் குறை
கூறினாலும் அரசியல்வாதிகள் தங்களின் நடத்தையை எப்பொழுதும் மாற்றியதில்லை. மக்கள் மட்டுமல்ல,
திரைப்படங்களும் சமூக வலைதளங்களும் அரசியல்வாதிகளை விடாமல் கிண்டல் செய்கிறது. இவ்வளவு
நடந்தும், அரசியல்வாதிகள் தங்களை திருத்திக்கொள்ள நினைக்காதது ஏன்? என்றைக்காவது, யோசித்தது
உண்டா?
நம்முடைய அரசியல் கட்டமைப்பில் பணம் இல்லாமல் தேர்தலில் வெற்றிப்பெறுவது
என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதனால் தேர்தலுக்கு தேவைப்படும் பணத்தை நன்கொடையாக தரும்
நபர்களை சந்திப்பதையும், அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பதையும் முன்னுரிமையாக
வைத்திருந்தினர், அரசியல்வாதிகள். இந்த சூழலில், தங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு
போடும் பொது மக்களை எப்படி சந்திப்பார்கள்?.
ஒரு சின்ன கணக்கு போடலாமா?
வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினரின் காலம் – ஐந்து ஆண்டுகள்.
வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு (ஞாயிற்றுக்கிழமை) என்று கழித்தால், ஒரு வருடத்திற்கு 313 நாட்கள். ஐந்து ஆண்டுகளுக்கு = 313 * 5 = 1565 நாட்கள்.
எம்எல்ஏ தூங்க, குழிக்க, குடும்பத்திற்கு என்று 10 மணி நேரம் எடுத்துக்கொண்டால்,
மீதம் இருப்பது, ஒரு நாளைக்கு 14 மணி நேரம். அப்படியென்றால், ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தமாக
ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கிடைப்பது, 1565 * 14 = 21,910 மணி நேரம். அதாவது,
21,910 * 60 = 13,14,600 நிமிடங்கள்.
21,910 * 60 = 13,14,600 நிமிடங்கள்.
ஒரு சட்டமன்ற தொகுதிக்கு சராசரியாக 2 லட்சம் மக்கள் இருப்பதாக கருதினால்,
ஐந்து ஆண்டுகளில், எம்எல்ஏ வால் ஒருவருக்கு ஒதுக்கும் நேரம் =
13,14,600 / 2,00,000 = 6.5 நிமிடங்கள். தோராயமா ஐந்து நிமிடங்கள்.
இப்படி நேரம் கம்மியா இருக்கும்போது, பணம் தரும் தொழிலதிபர்களுக்கு அதிக நேரம் ஒதுக்குறதும்,
ஓட்டுக்கு பணம் வாங்குற மக்களுக்கு குறைவான நேரம் ஒதுக்குறதும்.... சரியாதான் தோணுது...
இப்ப புரியுதா, எதுக்கு எம்எல்ஏ தொகுதிக்கு வர்றது இல்லைனு?
"விடாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொரோனாவை தடுக்க உதவும் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் என் பணிவான நன்றி" - மருதாணி.
"விடாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொரோனாவை தடுக்க உதவும் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் என் பணிவான நன்றி" - மருதாணி.
***************************************************************************************************************
கணிதம் சம்பந்தமான எமது பதிவுகள்
கணிதம் சம்பந்தமான எமது பதிவுகள்
Comments
Post a Comment