சில்க் ரோடு பகுதி -3 - The royal road becomes billion dollar business

திடீரென்று ஒரு நாள் ஜூலியாவிடம், தன் வலைத்தளத்தில் புதிய பொருள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக ரோஸ் கூறினான். ஏதாவது புது போதை பொருளாக இருக்கும் என்று எண்ணிய ஜூலியாவிற்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. ஆம், வலைத்தளத்தில் ஆயுதங்களை (GUN, பிஸ்டலிலிருந்து, கையெறி குண்டு வரைக்கும் அனைத்தும்) அறிமுகம் செய்திருந்தான், ரோஸ். ஜூலியாவிற்கு பயம் அதிகரித்தது. ஆயுதங்கள் இறையாண்மைக்கு எதிரானது, அரசாங்கம் கண்டிப்பாக உன்னை பிடித்துவிடும். விட்டு விடு என எச்சரித்தாள். ஆனால், ரோஸோ விடுவதாக தெரியவில்லை. இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. ரோஸ் பிரிந்து சென்று தனியாக வசிக்க ஆரம்பித்தான். பிரிந்து சென்றாலும், அவர்களின் காதல், அடிக்கடி சந்திக்க வைத்தது. அப்படி, ஒரு வார இறுதி நாளை ரோஸ், ஜூலியா மற்றும் ஜூலியாவின் தோழி மூவரும், கொண்டாடினர். கொண்டாட்டத்தின் இடையே சில கருத்து மோதல்கள் ஏற்பட்டு, பின்னர், சண்டையாக மாறியது. கோபமடைந்த ரோஸ் ஜூலியாவின் தோழியை திட்டி விட, அவளும் கோபப்பட்டு சென்று விடுகிறாள்.

(இந்த பதிவை புரிந்துக்கொள்ள, தொடரின் முந்தைய பகுதி-1 மற்றும் பகுதி-2 யை இந்த லிங்கில் வாசிக்கவும்)



தினம் காலை விழித்ததும், “SILK ROAD”யை பார்ப்பது ரோஸின் வழக்கம். அப்படி, அன்று காலை வலைத்தளத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போது, லேப்டாப்பில் “டொய்ங்” என்று ஒரு சத்தம். என்னவாக இருக்கும் என்று பார்த்த ரோஸ், அழத் தொடங்கினான். வந்தது ஃபேஸ்புக் பாப்-அப் மெஸேஜ். திறந்து பார்த்தால், “உன் போதை வலைத்தளத்தை சீக்கிரம் போலீஸ் கண்டுபிடிக்கும்” என்று ஜூலியாவின் தோழி, ரோஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தாள். உடனே அந்த போஸ்டை டெலீட் செய்துவிட்டு, ஜூலியாவை பார்க்க ஓடினான். தனது நண்பன் RICHARD மற்றும் JULIA வை தவிர யாருக்கும் தெரியாது என்று நம்பிய ரோஸுக்கு, ஜூலியாவின் தோழி எழுதியிருந்தது பெரும் அச்சத்தை தந்தது. ஜூலியாவிடம் கத்தினான். போலீஸ் பிடித்தால், 4 முதல் 99 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தில் கடுமையாக கடிந்து கொண்டான். ஜூலியா கண்கலங்கி மன்னிப்பு கேட்டாள். ரோஸிற்கு பயம் குறையவில்லை. அங்கிருந்து கிளம்பிய பின், திடீரென்று, ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் அக்கா வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தான். 

ஒருபுறம் அரசாங்கம், மறுபுறம் ஹாக்கர்ஸ், இதுபோறாத காதலின் துரோகம் என்று வாடிய ரோஸ், சற்று RELAX செய்ய தேர்ந்தெடுத்தது தான் ஆஸ்திரேலியா. சில மாதங்கள் அங்கேயே கழித்து விட்டு, அமெரிக்கா திரும்பிய ரோஸிற்கு, வலைத்தளத்தின் வளர்ச்சி ஆச்சர்யத்தை தந்தது. இருந்தும், ஆயுதங்களின் வியாபாரம் மட்டும் அரசு கெடுபிடியால் படுத்திருந்தது. ஓரு ஃபோட்டோ ஃப்ரேம் இருந்தா போதும், பின்னாடி போதை பவுடர் அல்லது மாத்திரையை ஈஸியா மறைத்து அனுப்பி விடலாம். ஆயுதம் என்பதால் கூரியர் மற்றும் தபால் மூலம் அனுப்ப முடியவில்லை. 

மற்றபடி, வருமானம் கொட்டத் தொடங்கியிருந்தது. ஆயிரம் லட்சமாகி, லட்சம் கோடிகளானது. ரோஸ் சில மாற்றங்களை வலைத்தளத்தில் கொண்டு வர விரும்பினான். அனுப்பப்படும் போதை பொருட்களின் அளவை வைத்து, கமிஷன் வேறுபடும் என்று அறிவித்தான். வலைத்தளத்தில் விற்பனையாளர்கள், சண்டையிட தொடங்கினர். சிலர் வலைத்தளத்தை விட்டு போய் விடுவதாக மிரட்டினர்.  ஆனால், ரோஸ் அசரவில்லை. சொன்னது போல, பலர் வலைத்தளத்தை விட்டு விலகினர். அதுமட்டுமல்லாமல், தனியாக ஒரு வலைத்தளத்தையும் ஆரம்பித்தனர்.

இந்த கால இடைவெளியில், காவல் துறையின் தேடுதலும் அதிகரித்திருந்தது. அனுபவமில்லாமல் உருவாக்கிய சில்க் ரோட் வலைத்தளத்தில் பல பாதுகாப்பு ஓட்டைகள் இருந்தன. இதை பயன்படுத்தி, டார்பெல், FBI அதிகாரி, சில்க் ரோடின் ஐபி அட்ரஸை கண்டுபிடித்தார். ஐஸ்லாந்தில் இருந்து இயக்கப்படுவதை தெரிந்து கொண்ட FBI குழு, அந்த நாட்டிடம், சில்க் ரோட் இயங்கும் சர்வரின் நகலை கேட்டது. அமெரிக்கா கேட்டதும் மறுகேள்வி கேட்காமல், நகலை ஒப்படைத்தது. சந்தோஷத்தில் குதித்த FBI, சில்க் ரோடை பிரித்து மேய ஆரம்பித்திருந்தது.

அதே நேரத்தில், ஜார்ட், போலீஸ் அதிகாரி, வேறு கோணத்தில் தனது விசாரணையை தொடங்கியிருந்தார். ஆர்டர் செய்யப்படும் பெரும்பாலான போதை பொருட்கள் தபால் மூலம் வருவதை தெரிந்து கொண்ட ஜார்ட், தபால்களை சோதனை செய்ய திட்டமிட்டார். ஏதேனும் பார்சல் சிக்கும் பட்சத்தில், ஆர்டர் செஞ்சவங்களை பிடிச்சுறலாம். ஆர்டரை அனுப்பினவங்களை எப்படி பிடிக்குறது? ஏன்னா வரும் பார்சல்கள் அனைத்தும் “மொட்ட கடிதாசியா” இருந்துச்சு. மொட்ட கடிதாசியை வைத்து, “இந்த பார்சல் உங்களுக்கு வந்திருக்கு, நீங்க தான் ஆர்டர் பண்ணியிருக்கனும்னு அரெஸ்ட்டும் பண்ண முடியாது”.

மற்றொருவர் கார்ல் ஃபோர்ஸ், போதை தடுப்பு துறையை சார்ந்தவர், ஒரு படி மேலே போய், தனது விசாரணைக்காக சில்க் ரோடில் உறுப்பினர் ஆகி விட்டார். பசுத்தோல் போர்த்திய புலியாக, ரோஸிடம் நேரடியாக பேசத் தொடங்கினார். தான் ஒரு போதைப் பொருள் விற்பனையாளர் என்று அறிமுகமாகி, பின்னர், ரோஸின் நம்பிக்கையான உளவாளியாக மாறினார். ஒவ்வொரு தகவலுக்கும் ரோஸ் அள்ளிக் கொடுத்த பணம், பிற்காலத்தில் கார்லை, உண்மையாகவே ரோஸ்க்கு வேலை செய்ய வைத்தது.

ஒரு நாள், தன்னிடம் பல கிலோக்கள் கொக்கைன் இருப்பதாகவும், குறைந்த விலையில் விற்க ஆள் தேடுவதாகவும் கூறினார், கார்ல் ஃபோர்ஸ். இதை கேட்ட ரோஸ், சில கிலோக்களை தான் வாங்கிக்கொள்வதாக கூறினான். தன் சில்க் ரோடில் வேலை செய்யும் ஒருவர் அதை வாங்கிக்கொள்வார் என்றும், அவரின் முகவரியையும் கொடுத்தான், ரோஸ். முதன் முறையாக சில்க் ரோடில் வேலை செய்யும் நபர் ஒருவரை நேரில் சந்திக்க போவதால், இதுவரை முகம் பார்க்காமல், பேசியே பழக்கப்பட்ட கார்லுக்கு, ஆர்வம் கூடியது.

போதை பொருள் ராஜாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவன் என்பதால், ஆயுதம் ஏந்திய போலீஸ், கூட்டமாக சென்று, ரோஸ் கொடுத்த முகவரியில் இருந்தவரை சுற்றி வளைத்தனர். கொடூர முகம், ஜிம் பாடினு எதிர்பார்த்த கார்ல்க்கு, அமுல் பேபி போல காட்சியளித்த, கர்டிஸ் க்ரீனின், முகம் ஏமாற்றத்தை தந்தது.


தொடரும்………………………..

"விடாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொரோனாவை தடுக்க உதவும் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் என் பணிவான நன்றி" - மருதாணி.

Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. En sago ithai niruthitinga.....,

    ReplyDelete
    Replies
    1. சோம்பேறித்தனம் தான் சகோ....

      Delete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

நைட்

அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2

The Art of War

The Sixth Extinction: An Unnatural History

Sapiens: A Brief History of Humankind

schindler's list