Posts

Showing posts from April, 2020

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

Image
பரீட்சை பேப்பர் முதல் திருமண பத்திரிக்கைகள் வரை, ‘உ’ னா என்ற பிள்ளையார் சுழியுடன் தான் இந்துக்கள் ஆரம்பிக்கின்றனர். பெரும்பாலான சமய இடங்களில் முதல் மறியாதை கிடைக்கப்பெற்று அமர்ந்திருக்கும் இவரை கணபதி, விநாயகர், யானைமுகத்தோன், பிள்ளையார், கஜமுகன், விக்னேஸ்வரன் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரின் பிறப்பு பற்றி பல கதைகள் இருந்தாலும், கலியுகத்தில் கூறப்படும் கதையை சுருக்கமாக பார்க்கலாம். பின்னர் அவரின் தோற்றம், மக்களிடத்தில் பிரபலமான கதை மற்றும் இவரின் பின்னால் இருக்கும் அரசியலையும் பார்க்கலாம். திருச்செங்காட்டங்குடியில் இருக்கும் வாதாபி விநாயகர்

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?

Image
உலகின் பெருவாரியான மக்களால் பின்பற்றப்படும் மதம் கிறிஸ்தவம். அதன் புனித நூலாக இருப்பது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு . இந்த மதத்தின் மையப் புள்ளியாக பார்க்கப்படுவது இயேசுவின் அற்புதங்களும், உயிர்த்தெழுதலும். நம்முடைய பாவத்தை கழுவ ஏசு சிலுவையில் அறையப்பட்டு, பல துன்பங்களை அனுபவித்து, பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று  இருபது நூற்றாண்டுகளாக மக்களால் நம்பப்படுகிறது. அதுவே ஈஸ்டர் என்னும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

கணக்கு தவறானால் கம்பி எண்ணுறது நிச்சயம் - Wrongly jailed for false probabilistic assumption

Image
வீட் டு ல கணக்கு தப்பா போட்டா அம்மா அடிப்பாங்க , பள்ளிக்கூடத்துல கணக்கு தப்பா போட்டா டீச்சர் அடிப்பாங்க , அதேது கோர்ட்ல ( நீதிமன்றம் ),  நீதிபதி   கணக்கு தப்பா போட்டா ( எ.கா. நீதியரசர் குமாரசாமியின் கணக்கு ) ??? குற்றவாளி தப்பித்தும் போகலாம், நிரபராதி ஜெயி லுக்கும் போகலாம்.  

போலி செய்திகளின் எக்ஸ்போனென்சியல் க்ரோத்: INFODEMIC OF FORWARD MESSAGES

Image
காலை மணி 6:00 : நபர் – 1, தனது மொபைலில் ஒரு போலி செய்தியை பெறுகிறார். மணி 6:30 :  அரைமணி நேரத்தில்  அந்த போலி செய்தியை , தனது நண்பர்கள் இருவருக்கு (நபர்-2, நபர்-3),  பகிர்கிறார். ஆக, மூன்று நபர்களை போய்ச் சேர்கிறது. மணி 7:00 : இப்பொழுது, நபர்-2,  மற்றும் நபர்-3, தலா இரு  நண்பர்கள் என மொத்தம் நான்கு பேருக்கு போலி செய்தியை பகிர்கின்றனர். மொத்தத்தில், ஒரு மணி நேரத்தில் 7 நபர்களை சென்றடைகிறது, போலிச் செய்தி. இப்போது, 12 மணி நேரத்தில், அதாவது மாலை 6 மணி வரையில், போலி செய்தி எத்தனை நபர்களை அடைந்திருக்கும்??  உடனே, 12 * 7 = 84 என்று கால்குலேட்டர் எடுத்து நீங்கள் கணக்கு போட்டால், உங்கள் கணக்கு முற்றிலும் தவறு!!!!! கீழே இருக்கும் படத்தை பாருங்கள். அதன் விளக்கமும் புரியும்படி விரிவாக படத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாசித்து தெளிவு பெறுங்கள்.

சில்க் ரோடு பகுதி -3 - The royal road becomes billion dollar business

Image
திடீரென்று ஒரு நாள் ஜூலியாவிடம், தன் வலைத்தளத்தில் புதிய பொருள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக ரோஸ் கூறினான். ஏதாவது புது போதை பொருளாக இருக்கும் என்று எண்ணிய ஜூலியாவிற்கு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. ஆம், வலைத்தளத்தில் ஆயுதங்களை (GUN, பிஸ்டலிலிருந்து, கையெறி குண்டு வரைக்கும் அனைத்தும்) அறிமுகம் செய்திருந்தான், ரோஸ். ஜூலியாவிற்கு பயம் அதிகரித்தது. ஆயுதங்கள் இறையாண்மைக்கு எதிரானது, அரசாங்கம் கண்டிப்பாக உன்னை பிடித்துவிடும். விட்டு விடு என எச்சரித்தாள். ஆனால், ரோஸோ விடுவதாக தெரியவில்லை. இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. ரோஸ் பிரிந்து சென்று தனியாக வசிக்க ஆரம்பித்தான். பிரிந்து சென்றாலும், அவர்களின் காதல், அடிக்கடி சந்திக்க வைத்தது. அப்படி, ஒரு வார இறுதி நாளை  ரோஸ், ஜூலியா மற்றும் ஜூலியாவின் தோழி மூவரும்,  கொண்டாடினர். கொண்டாட்டத்தின் இடையே சில கருத்து மோதல்கள் ஏற்பட்டு, பின்னர், சண்டையாக மாறியது. கோபமடைந்த ரோஸ் ஜூலியாவின் தோழியை திட்டி விட, அவளும் கோபப்பட்டு சென்று விடுகிறாள். ( இந்த பதிவை புரிந்துக்கொள்ள, தொடரின் முந்தைய பகுதி-1 மற்றும்  பகுதி-2   யை இந்த லிங்கில் வாசிக்கவும் )

கட்டவிழும் சமூகம்... Unleashing society...

Image
நகர வாழ்க்கைக்கு மாறிய புதிதில் ரோட்டோரம் இருக்கும் படுக்கையறையில் படுத்து தூங்க முயற்சிக்கும் போது வண்டியோடும் சத்தமெல்லாம் மண்டைக்குள் "மே" என்று சண்டையிடும்... சண்டையிட்டு, சமாதானமாகி மனதை கொஞ்சம் உறங்க வைப்பதற்குள் விடிந்து விடும்... இன்றைக்கு நிலைமை தலைகீழாக உள்ளது. வண்டி ஓடும் சத்தமோ, ஒலிபெருக்கி சத்தமோ, ஓயாத இரைச்சலோ, ஏதுமின்றி செவிடாகி போன இயல்போடே நடமாடிக்கொண்டிருக்கிறேன். 21 நாட்கள் எப்படி கடத்தபோகிறோம் என்று நினைத்து பார்க்கையில் மனம் மலைத்து போகிறதா?? அப்படி எனில் பொதுநிலை மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.... ஆம் நீங்க கொரோனாவால் பாதிக்கப்படலாம் இல்லாமலும் போகலாம்... ஆனால் இந்த மன நோயால் நீங்கள் எப்போதாவது அல்லது எப்போதும் அதில் பாதிக்கபட்டுதான் கொண்டுருக்கிறீர்கள்... அது என்ன எனக்கு தெரியாமல் என்னுள் இருக்கும் மன நோய் என கேள்வி எழுகிறதா? ஒரு பெரும்பான்மையான கூட்டம் காந்த சக்தியை விட மோசமாக செயல்பட்டு அவர்களின் வாழ்க்கை முறையையோ செயலையோ உங்களின் மீது திணித்து, ஏற்று கொள்ள வைத்து, அதன்படி நடக்க வைக்கிறார்கள் ..." மெட்ரிகுலேஷன்லா படிச்

எம் எல் ஏக்கள் தொகுதிகளுக்கு வராதது ஏன் - Small Calculation on MLA's constituency visit

Image
“ தேர்தல் வந்தா மட்டும் தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரும் எம்எல்ஏ, மத்த நேரம் இந்த பக்கம் தல வச்சு கூட படுக்குறது இல்ல ” மக்கள் அரசியல்வாதிகளை இப்படி குறை கூறுவது வழக்கம். எவ்வளவுதான் குறை கூறினாலும் அரசியல்வாதிகள் தங்களின் நடத்தையை எப்பொழுதும் மாற்றியதில்லை. மக்கள் மட்டுமல்ல, திரைப்படங்களும் சமூக வலைதளங்களும் அரசியல்வாதிகளை விடாமல் கிண்டல் செய்கிறது. இவ்வளவு நடந்தும், அரசியல்வாதிகள் தங்களை திருத்திக்கொள்ள நினைக்காதது ஏன்? என்றைக்காவது, யோசித்தது உண்டா? நம்முடைய அரசியல் கட்டமைப்பில் பணம் இல்லாமல் தேர்தலில் வெற்றிப்பெறுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இதனால் தேர்தலுக்கு தேவைப்படும் பணத்தை நன்கொடையாக தரும் நபர்களை சந்திப்பதையும், அவர்களுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பதையும் முன்னுரிமையாக வைத்திருந்தினர், அரசியல்வாதிகள். இந்த சூழலில், தங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் பொது மக்களை  எப்படி சந்திப்பார்கள்?. ஒரு சின்ன கணக்கு போடலாமா? வெற்றிபெறும் சட்டமன்ற உறுப்பினரின் காலம் – ஐந்து ஆண்டுகள். வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு ( ஞாயிற்றுக்கிழமை ) என்று கழித்தா

ஷோடன் - SHODAN THE SCARIEST SEARCH ENGINE

Image
என்ன புதுசா இருக்குன்னு பாக்குறீங்களா ? கூகுள் மாதிரி , இது வும் ஒரு SEARCH ENGINE ( shodan.io ). கூகுள் இருக்கும் போது இந்த செர்ச் இஞ்சின் என்னத்த பெருசா தேடிற போதுனு தோனுதுல்ல ? கூகுள்ல , நமக்கு தேவைப்படும் வெப்சைட்டை தேடலாம் . ஆனால், ஷோட னை பயன்படுத்தி இன்டர்நெட்ல கனெக்ட் ஆகி இருக்கும் கருவிகளை கண்டுபிடிக்க லாம் . (உதாரணத்திற்கு, இன்டர்நெட்ல கனெக்ட் ஆகி இருக்கும் ப்ரிண்டர், வெப்கேமரா, ரௌட்டர் மற்றும் பல). மேலும், எத்தனை கருவிகளில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதற்கு முந்தைய பதிவுகளில் பார்த்த இருள்வலை போல மறைமுகமாக இயங்காமல், வெளிப்படையாக இயங்குகிறது, ஷோடன். ஒரு இடத்தில் இருந்து இயங்காமல், பல நாடுகளில் இருந்து இயங்குகிறது ஷோடன். அதனால், ஷோடனை முடக்குவது ரொம்ப கஸ்டம். பாதுகாப்பு அம்சங்களில் இருக்கும் ஓட்டைகளை சொல்வதில் தவறொன்றுமில்லை என்பதால் பல நாடுகள் ஷோடனை விட்டுவைத்திருக்கிறது.  ஷோடன் வெப்சைட் விஞ்ஞானிகள் கூறுவது போல, மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால், நாடுகள் ஒன்றோடு ஒன்று மறைமுகமாக தாக்க

சில்க் ரோடு பகுதி -2- USE OF BITCOIN TOR IN SILKROAD

Image
பிட்காயின் சட்ட விரோதமான செயலுக்கு மட்டுமல்ல, நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டதால், 2010ல் ஆரம்பித்த பிட்காயின் , வெகு விரைவாக மக்கள் மத்தியில் பரவியது. யாரும் யாருக்கும் பணம் அனுப்பலாம். அரசாங்கத்தால், ட்ராக் செய்ய முடியாது. வலைத்தளங்களில் போதை பொருட்களை வாங்கும் நபர்கள், தங்களின் அடையாளங்களை மறைத்து, பணம் செலுத்த பிட்காயின் தான் சரியானது என்று தேர்ந்தெடுத்தான், ரோஸ். ஒருவழியாக, அனைத்து தடைகளும் விலக ஜனவரி 2011ல் தனது வலைத்தளத்தை அமோகமாக வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்தான். ( இந்த பதிவை புரிந்துக்கொள்ள, தொடரின் முந்தைய பகுதி-1 யை இந்த லிங்கில் வாசிக்கவும் ) இன்டெர்நெட்ல இருக்குற 5-10% வெப்சைட் மட்டும் தான் google ல தேடி கண்டுபிடிக்க முடியும். மீதி வெப்சைட்க ள் சாதாரணமா தேடி னால் கிடைக்காது. இப்படி மறைமுகமாக இயங்கும் பல வெப்சைட் , போதை பொருட்கள் விற்பனை , ஆயுத கடத்தல் , தீவிரவாத செயல்கள் என்று இயங்கி கொண்டிருக்கிறது. தன்னை பற்றிய அடையாளம் , தான் செய்யும் செயல்கள் , வெளியுலகிற்கு தெரியாமல் இருக்க பயன்படும் வெப்சைட்களும் இதில் அடங்கும். அரசாங்கத்தால் இந்த வெப்சைட்டுக