போலிகள் ஜாக்கிரதை - Double blind placebo - Be aware

எத்திசையிலும் கேட்கும் ஒரே வார்த்தை “கொரோனா”. ரசம் சாபிட்டா நல்லதாம், பூண்டு கண்டிப்பா சேர்கனுமாம், உப்பு தண்ணில வாய் கொப்பளிக்கனுமாம், ஏதோ சொல்றாங்க, ஆனால் அறிவியல் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அறிவியல் உலகத்தில் மருந்துகள் இல்லை என்று வெளிப்படையாக சொன்ன பின்பும், நம்ம ஊருல ஒரு கூட்டம் விடாப்பிடியாக “மாட்டு மூத்திரத்தை” பரிந்துரைக்கிறது. கூட்டம் கூட்டமாக கூடி குடிக்கிறார்கள். அதில் சிலர், குடித்த முடித்த பின்பு உடம்புக்கு தேவலன்னு சொல்றாங்க. ஒரு மருந்தின் தன்மையை, மருந்தை உட்கொள்ளும் மக்கள் சொல்லும் பதிலை வைத்து எடை போட முடியாது. அதற்கென்று அறிவியல் உலகத்தில் சில பரிசோதனை முறைகளை வைத்துள்ளனர். இந்த பரிசோதனைகளை வெற்றிகரமாக கடக்கும் மருந்துகளே, “மருந்து”, மற்றவை அனைத்தும் போலிகளே.  அதை, “Double Blind Placebo Test” [Ref], இரட்டை குருட்டு போலி பரிசோதனை என்று கூறுகின்றனர். மருந்து அல்லாமல், எதை (மருந்து போல்) உட்கொண்டாலும் நோயிலிருந்து குணமடைபவர்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, நம்பிக்கையின் பலனால் குணமடைபவர்கள், இரண்டு நோய் சுழற்சி முறையால் குணம் அடைபவர்கள்.



உதாரணத்திற்கு, காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 10 நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை ஐந்து ஐந்தாக பிரித்து இரு அறைகளில் (A&B) அடைத்து விடலாம். அதாவது, ‘A’ அறையில் (room) ஐந்து பேர்களும், ‘B’ அறையில் ஐந்து பேர்களும் இருப்பார்கள். இப்போது, காய்ச்சல் நோய்க்கு கண்டுபிடித்ததாக சொல்படும் மருந்தை வாங்கி, அறை ‘A’ யில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். அறை ‘B’ ல் உள்ளவர்களுக்கோ, மருந்து என்ற போர்வையில் ஏதாவது, சர்க்கரை தண்ணீர், கொடுக்கலாம். இரு அறையில் இருப்பவர்களுக்கும், தங்களுக்கு கொடுக்கப்பட்டது உண்மையான மருந்து என்று நினைப்பதால், மனதளவில் நம்பிக்கை அதிகரித்து குணமடையும் வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த சூழலில், அறை ‘A’ யில் உள்ளவர்கள், ‘B’யை விட, விரைவாக குணமடைந்தால் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட காய்ச்சல் மருந்தை அறிவியல் உலகம் அங்கீகரிக்கிறது.

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், மருத்துவர் Henry Beecher, தன்னிடம் Morphine (வலிநிவாரணி) முடிந்துபோன சூழலில், தனது நோயாளி ஒருவர்க்கு உப்பு தண்ணீரை செலுத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளார். எதற்காக இதை சொல்கிறேன் என்றால், மக்கள், தங்களுக்கு கொடுக்கப்படுவது மருந்து தான் என்று  நம்பிக்கை வைக்கும்போது, நம்பிக்கையே அவர்களை பாதி  குணமடைய செய்கிறது. எனவே அறிவியல் சமூகம், Double Blind Placebo Test யை பாஸ் பண்ணாத எதையும் மருந்தாக ஏற்றுக்கொள்வதில்லை. Homeopathy இந்த டெஸ்டை எப்பொழுதும் கடந்ததில்லை. ஹோமியோபதியில் சிகிச்சை பெறும் பலரும், நோயில் இருந்து குணமடைந்துள்ளார்கள் என்பது பொய்யா? குணமடைந்து இருக்கலாம், ஆனால், கொடுக்கப்பட்ட மருந்தால் குணமடைந்தார்களா என்பது தான் கேள்வி? இதுதான் நம்பிக்கையின் பலனோ, அடுத்து சுழற்சியின் பலனை பார்க்கலாம்.


ஒரு வாரம் அல்லது இரு வாரத்தை கடந்தால் சில நோய்கள், அதுவே குணமடைந்து விடுமாம். உதாரணத்திற்கு, சாதாரண காய்ச்சலுக்கு மருந்தே கொடுக்காமல் விட்டால், ஓரிரு வாரங்களில் அதுவே குணமாகுமாம். இத்தகைய சுழற்சி நோய்களை, தங்களின் மருந்தின் மூலம் தாங்கள் குணமடைய செய்ததாக சிலர் மார்தட்டுகிறார்கள், நம்பாதீர்கள். ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று இயங்கும் சில மருத்துவ பிரிவுகள் இதுவரை புதியதாக எந்த நோயையும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை. ஆனால், புதியதாக ஒரு நோயை கண்டுபிடித்த பிறகு, மருந்தே இல்லாத நோய்களை, கேன்சர், எய்ட்ஸ், எல்லாம் குணமடைய செய்வோம் என்று சொல்வார்கள். அதுமட்டுமல்ல, ஏதாவது நோயை கண்டுபிடித்தால், அதற்கு ஏற்கனவே தங்களிடம் மருந்து இருப்பதாக மார்தட்டுவார்கள், ஜாக்கிரதை!!!!!!!.

கொரோனாவை பற்றிய கணித மாதிரியை இங்கே வாசிக்கவும்.


"விடாமல் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கொரோனாவை தடுக்க உதவும் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களுக்கும் என் பணிவான நன்றி" - மருதாணி.

Comments

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

ஐரிஷ் பஞ்சம்

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

நைட்

The Sixth Extinction: An Unnatural History

Bengal Famine

Sapiens: A Brief History of Humankind

லாக்டவுன் குமுறல்கள்

இருள் வலை - Dark web, the beauty of beast