கொரோனா வைரஸ் குடும்பத்தார் (Corona virus - large family of viruses)
சீனாவுல, இந்த குடும்பத்துல பிறந்திருக்கும்
ஒருவரால தான் உலகமே பயந்துட்டு இருக்கு. பிறந்து பேரு வைக்கதுக்கு முன்னாடியே பல பேர
போட்டு தள்ளிட்டு. இதே குடும்பத்துல, 2002 - 2003ஆம் வருஷத்துல ரெண்டு பேரு பிறந்தாங்க.
ஒருத்தர் SARS (Severe Acute Respiratory Syndrome), இன்னொருத்தர் MERS (Middle East Respiratory
Syndrome). அந்த காலகட்டத்தில் ரெண்டு பேரும் பல பேரோட உயிர எடுத்துட்டு போனாங்க. சாதி,
மதம் பார்க்காமல் யாரா இருந்தாலும் அவங்க சுவாசத்தை நிறுத்தி கமுக்கமா போட்டு தள்ளுறதுதான்
இவங்க குடும்ப தொழில்.
விளையாட்டாக சொன்னாலும், அண்மையில் பீதியை கிளப்பி
கொண்டிருக்கும் வைரஸ் கொரோனா, மிருகங்களிடம் இருந்து வந்ததாக சொல்கிறார்கள். முதலில்,
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர், மீன் சந்தையில் வேலை பார்த்தவர்கள்
என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்னர் வந்த SARS. MERS போல, இந்த வைரஸும் முதலில்
மக்களின் சுவாசக் குழாயை பாதித்து பின்னர் மரணம் வரை அழைத்துச் சென்று விடுகிறது.
புதிதாக வந்துள்ள வைரஸின் தன்மை பற்றிய ஆய்வுகள்
முடிவடையாத சூழலில், இந்த வைரஸால் வரும் இறப்பு விகிதத்தை துல்லியமாக கூற முடியவில்லை.
இருந்தும் SARS, MERS ஒப்பிடுகையில் புதிய வைரஸின் பாதிப்பு தன்மை குறைவாகவே இருப்பதாக
கூறுகிறார்கள். SARSஆல் பாதிக்கப்பட்ட மக்களின் இறப்பு சதவிகிதம் 5-6% ஆக இருந்த நிலையில்,
புதிய வைரஸின் இறப்பு சதவிகிதம் 2% தான் என்று பதுவிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பலவீனமானவர்களை அதிகம் பாதிக்கிறது என்றும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து
ஒரு மீட்டர் தூரம் தள்ளி இருந்தால், வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள்
கூறுகிறார்கள். மூக்கு, வாய் வழியாக பரவுவதால் முகமூடி போடுவது நல்லது. வைரஸ் பரவுவதை
தடுக்க பல முயற்சிகள் எடுத்தும், ஈரான், பிரான்ஸ் போன்ற பல உலக நாடுகளை விட்டுவைக்கவில்லை.
மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், வைரஸை பரவாமல் தடுப்பதே சரியான நகர்வாக இருக்கும்.
இதற்கிடையில், ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களில்
41,000க்கும் மேல், உடல் நலம் அடைந்துள்ளனர் [Ref].
Crisp content.. Well done sir.
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDelete