வைரஸின் கருணையால் நாம் வாழ்கிறோமா? - Better understanding of Life of Virus
மரபணு அதோட வம்சத்தை பெருக்க
போட்ட ப்ளான்ல ஒன்னுதான், ஆண் பெண் கூடலாம். பாஸ், நான் சொல்லல. ரிச்சட் டாக்கின்ஸ்
அவரோட “Selfish Gene” புக்ல சொல்றாரு.
மனித வரலாற்றின் தொடக்கத்தில்
பாக்டீரியா, வைரஸ் லாம் கொஞ்சம் வைலன்ட்டா தான் இருந்துருக்கு. இதனால என்ன ஆச்சுனா,
மக்கள் கொஞ்ச வயசிலயே மண்டய போட்டுருக்காங்க. தான் வாழ மனித உடல் தேவை என்பதால், பரிணாம
வளர்ச்சியில் தன்னோட வைலன்ஸ் கேரெக்ட்டரை குறச்சுகிடுச்சாம், வைரஸும் பாக்டீரியாவும்.... இப்ப என்ன நினைக்க தோனுதுனா, நம்மளால பாக்ட்டீரியா வைரஸ் லாம் வாழுதா, இல்லை அதுகளால
நாம வாழுறோமானு.
[REFERENCE] |
வைரஸ் என்பது உயிரணு அல்ல,
அது ஒரு துகள். எப்பொழுதும் தான் வாழ, ஒரு விருந்தாளியை தேடும். சரியான நபரின் உடம்பிற்குள்
குடியேறும் வைரஸ், முதல் வேலையா இனப்பெருக்கம் செய்யுமாம். அதுக்கு அடுத்து தான் பால்
காய்ப்பு.
தன்னையே அறியாமல், பல
நேரங்களில் தான் குடி புகுந்த விருந்தாளியை வெகுவாக பாதித்து சாகும் நிலைக்கு கொண்டு
போகுமாம். அப்படி ஒரு நிலை வரும் முன்னால், வைரஸ் மற்றொரு விருந்தாளியை தான் உயிர்
வாழ தேடுகிறது. இப்படி ஒருவர் உடம்பிலிருந்து மற்றவர் உடம்பிற்கு போகும் ஆசையில் வைரஸ்
தீட்டும் திட்டங்கள் தான் சளி, இருமல், வயிற்றுப்போக்கு, வாந்தி எல்லாம்.
ஒரு உடம்பிற்குள் செல்லும்
வைரஸ் உடனடியாக அறிகுறி காண்பிக்காமல் இருக்க காரணம், அது அமைதியாக இருக்கிறது என்றோ,
செயல்பட முடியாமல் இருக்கிறது என்றோ அர்த்தமல்ல. அமைதியாக ஒரு உடம்புக்குள் புகுந்து,
இனப் பெருக்கம் செய்து கொண்டு, அதாவது அந்த உடம்பில் செயல்பட தன் முழு திறனையும் வளர்த்துக்
கொண்ட பின்னர், வைரஸானது இதோ வந்துவிட்டேன் என விருந்தாளியிடம் தன்னை மெதுவாக காண்பிக்க தொடங்குகிறது. தான் வாழ இடம் கொடுத்த விருந்தினரை சளி, காய்ச்சல் என உபசரிப்பதோடு
நிற்காமல், அவரை இருமுவுதற்கும், தும்முவதற்கும் தூண்டி, தான் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே, புது விருந்தாளிகளிடம்
பரவுகிறது.
தொடக்கத்தில் இருந்தே வைரஸ் இவ்வளவு அறிவாளியா இருந்துச்சான்னா, இல்லை!!! படிப்படியாக மனித தலைமுறை எப்படி தன்
அறிவை வளர்த்துகொண்டதோ, அது போல தான் வைரஸும். நாம நினைக்குற மாதிரி, வைரஸ் தரையில
மட்டும் வாழாதாங்க. ஒரு லிட்டர் தண்ணீர்க்கு ஒரு வைரஸ் என்று கடலில் மட்டும் 4*1030வைரஸ்
இருக்குதாம். ஷார்ட் டெர்ம் பாக்கேஜ், லைஃப் டெர்ம் பாக்கேஜ் என்று வைரஸில் பல வகைகள்
உண்டாம். அப்படி லைஃப் டைம் பாக்கேஜ்ஜா வர்றதுதான் HIV, மற்றும் ஷார்ட் டெர்ம் பாக்கேஜில்
வருவது தான் ஸார்ஸ், மெர்ஸ், எபோலா, நிபாஹ், மற்றும் இப்போ உலகத்த ஆட்டி படைக்குற வைரஸும்.
எல்லாம் ஒகே! வைரஸ் என்றால்
என்ன?
ஏற்கனவே வைரஸ் என்பது
ஒரு துகள் என்று பார்த்தோம். ஒரு பிட் பேப்பர்ல தன் ஜாதி, மதம், வம்சம், எத்தன பேர
போட்டு தள்ளணும் போன்ற விவரங்களை எழுதி பாதுகாப்பாக ஒரு கவசத்தோடு(CAPSID) இருப்பது
தான் வைரஸ். இந்த கவசம் வெவ்வேறு வடிவில் இருக்குமாம். இதனால் தான் அம்மை வைரஸ் செங்கல்
வடிவிலும், ராபீஸ் வைரஸ் துப்பாக்கி குண்டு வடிவிலும் காட்சி அளிக்கிறது. பாக்டீரியாவை
விட வைரஸ் ரொம்ப சிறிசு தான். ஆனா, படும் சோம்பேறியான வைரஸுக்கு சேட்டை மட்டும் அதிகம். அதுமட்டுமல்லாமல், நம்ம உடம்புல உள்ள இம்யுன் சிஸ்டத்தை ஏமாத்த அப்ப அப்ப ஆள்மாராட்டமும் பண்ணுமாம். ஒவ்வொரு வைரஸும் தன்னிடம் 2லிருந்து 200 மரபணுக்களை வைத்திருக்குமாம்.
இப்போ உயிரணு என்றால்
என்னனு லைட்டா பாக்கலாம். உயிரணு தன் அன்றாட வாழ்க்கையை சமாளிக்க, நிறைய
வேலக்காரங்கள வச்சிருக்கும். அதில் இரண்டு முக்கியமானோர் ரிபோசோம் மற்றும் மைட்டோகான்ட்ரியா.
ரிபோசோம்மை புரதச் சத்து தயாரிப்பதற்கும், மைட்டோகான்ட்ரியாவை எனர்ஜி ட்ரிங்க் தயாரிக்க
பயன்படுத்துமாம். இப்போ ஒருத்தர் உடம்புக்குள்ள போகுற வைரஸ் முதல் வேலையா, உயிரணு கிட்ட
இருந்து வேலைகாரங்களை ஹைஜாக் செய்வது தான். ஏன்னா,
தான் உயிர் வாழ தேவையான புரதச் சத்து, எனர்ஜி ட்ரிங்க் ரெண்டையும் அதுககிட்ட இருந்து
வாங்கிக்கலாம்ல. அதுக்காகத்தான்.
பெரும்பாலான வைரஸ்கள்
பறவைகள், பன்றிகள், கோழிகள், குதிரைகள் வழியாக மனிதர்களிடம் வந்ததாக கூறுகிறார்கள்.
இதில் முக்கியமாக, இப்படி வரும் வைரஸ்கள் H (HAEMAGLUTININ) & N (NEURAMINIDASE)
என்கிற இரு மரபணுக்களால் ஆனவை. குறிப்பிடும்
படியாக, ஸ்பானிஷ், ஏஷியன், ஹாங்காங், ரஷ்யன், மற்றும் பன்றி காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் பரப்பிய வைரஸ்கள் அனைத்தும்
ஒன்று அல்லது ஒன்றுக்கு மேலான, மேலே குறிப்பிட்டிருக்கும் மரபணுக்களை கொண்டவை. பெரும்பாலான வைரஸ்கள் மக்களிடம் பரப்பியதற்கு வௌவ்வாலும்
ஒரு காரணம்.
இப்படி மிருகங்களிடமிருந்து
வைரஸ் மனிதர்களுக்கு பரவியதற்கு முக்கிய காரணம், நாம் அவர்களின் வாழ்விடத்தை ஆக்கிரமித்தது
தான்.
ஆதலால், மிருகங்கள அதுக
போக்குக்கு வாழ விடுங்க. வாழவும் செய்யுங்க.
Informative 👍🏻
ReplyDeleteமிக்க நன்றி
Delete