“சாந்து பொட்டு, சந்தன பொட்டு” கம்பு சுத்தும் காவல்துறை!! - Corona awareness is indeed required rather than lathi charge

கையில் தடிகளோடு நிற்கும் காவல்துறையினர், கேள்வியே கேட்காமல், கண்ணில் பட்டவர்களை அடிக்கிறார்கள் [REF]. இதை காணொளியாக எடுத்து சமூகவலைதளத்தில் பரப்புகிறார்கள் சிலர். அதைக் கண்டு ரசிக்கிறார்கள் பலர். அடிவாங்கியவர்களில் எத்தனை பேர் முக்கியமான  விஷயத்திற்காக வெளியே வந்திருக்கக் கூடும்? தவறோ! சரியோ! ஒருவரின் துன்பத்தில் நாம் சிரிப்பது எந்த விதத்திலும் சரி ஆகாது. 

செய்தித்தாள்களில் அடிவாங்கியவர்களின் புகைப்படங்களை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. அவர்களின் முதுகில் சுவஸ்திக் முத்திரை போல், ரப்பர் ட்யூப்களால் அடிவாங்கிய தடங்கள், போலீஸ் செயலின் பரிதாபங்கள். அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் குறை கூறவில்லை. சாலை சிக்னலில் சில அதிகாரிகள் மக்களிடம் மன்றாடும் காணொளிகள் மனதை உருக்குபவை. 

மஹராஸ்டிராவில் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியதில் உயிர்யிழந்துள்ளார் [REF]. அதுமட்டுமல்லாமல், கர்நாடகாவில் மருத்துவர்களை தாக்கும் புகைப்படம், இந்தூரில் செய்தியாளர்களை தாக்கியதாக போலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் [REF] என்று பட்டியல் நீண்டுகொண்டுபோகிறது.

புதுசா வைரஸ் வந்துட்டுனா நான் எதுக்கு வீட்டுக்குள்ள இருக்கனும்னு நாலு பேரு கேட்கத்தான் செய்வான். அவனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அரசின் கடமை. சகிப்புத் தன்மை இல்லாமல் அரசு இயங்க முடியாது. நம்மை விட அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனா, இதை எப்படி எதிர்கொண்டது, என்பதை பதிவின் பின் பகுதியில் பார்க்கலாம்.
தங்களின் சொந்த ஊரை நோக்கி.... 

பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் முதல் அவசர நிலை இதுவாகத்தான் இருக்கும். இதுபோன்ற வைரஸுகளை படங்களிலும், நாவல்களிலும் பார்த்திருக்கும் பலருக்கும், நேரடியாக பார்க்கும் அனுபவம் வித்தியாசமாகவே இருக்கும். இத்தகைய சூழலில், படிக்காத ஏழை, எளியோர்கள், அன்றாடங்காய்ச்சிகளுக்கு திடீரென அறிவிக்கப்பட்ட அவசர நிலை ஒரு அதிர்ச்சி தரும் செய்திதான். அன்றாட கூலிகளாக வாழ்க்கையை நடத்தும் இவர்களுக்கு மூன்று வாரங்கள் வேலையின்றி சமாளிப்பது என்பது அத்தனை எளிதல்ல. டில்லியிலிருந்து, மக்கள் குழந்தை, குட்டிகளோடு ராஜஸ்தான், உத்திர பிரேதசம், பீஹார் என்று தங்களின் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் காட்சிகள் மனதை உருக்குபவை [REF]. பிழைக்க வந்த ஊரில் பட்டினி கிடந்து சாவதை விட, சொந்த ஊருக்கு சென்றுவிட்டால் பிழைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ஐநூறு, ஆயிரம் கிலோமீட்டர் நடக்க துணிந்துவிட்டனர். போகும் வழிகளில் உண்ண, குடிக்க ஏதும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால், சில நல்லுள்ளங்கள் இடை இடையில், பாதையாத்திரிகளுக்கு உணவு அளிக்கின்றனர். அதில் சிலர், மூன்று நாட்களுக்கு பின் இன்று தான் உணவு கிடைத்தது என்று கூறுகிறார்கள். 
டில்லி, சென்னை, மும்பை, ஜெய்ப்பூர் போன்ற பெரிய நகரங்களில், கூலி தொழில்கள் செய்யும் மக்களின் அன்றாட உணவு செலவு மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை, அவசர நிலைக்கு முன்னால் அரசு யோசித்திருக்க வேண்டும். உணவு பொருட்கள் கிடைக்கும் இடங்களை தெளிவாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்திருக்க வேண்டும். “இந்த மாதத்திற்கான வீட்டு வாடகையை கொடுக்க முடியாததால் என் சொந்த ஊருக்கு நடந்து போகிறேன்” என்று சொல்லும் கூலி மக்களுக்கு அரசு ஆதரவு கொடுத்திருக்க வேண்டும். பயணங்களை தவிர்க்க அரசு அறிவுரைகள் கூறி, 21 நாட்கள் அவர்களின் உணவு தட்டுப்பாட்டை அரசு பார்த்துக்கொள்ளும் என்ற உத்திரவாதத்தை கொடுத்திருக்கவேண்டும்.

பல நூறு கிலோமீட்டர் நடக்க தயாராகும் ஒரு மக்கள் கூட்டத்தை படமெடுக்கும் பத்திரிக்கையாளரை பார்த்து, அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவர், சாப்டீங்களா??? என்று கேட்கும் காட்சி கண்கலங்க வைக்கிறது. இராமாயணம், மகாபாரதம் தொடர்களை மறு ஒளிபரப்பு செய்து வீட்டிலிருந்து மக்களை பார்க்கச் சொல்வது சரிதான். ஆனா, இப்ப இருக்குற சூழல்ல மக்களுக்கு அரசு கொடுக்க வேண்டியது தைரியமும், விழிப்புணர்வும்தான். 

ஜனதா கர்ஃப்யூவை, மோடி ஜி ஹெலிகாப்டரில் நாட்டுக்கே மருந்து அடிக்கிறார் என்று தவறுதலாக புரிந்து கொண்டு, எனது பக்கத்து கிராம மக்கள் தங்களின் ஆடு மாடுகளை வீட்டிற்குள் அடைத்து வைத்தனர். மக்களுக்கு விழிப்புணர்வு எவ்வளவு முக்கியமானது என்பதற்கு இதுவே உதாரணம். இதற்கு மாறாக,
மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் போன்ற சிலர், மக்களை திசைதிருப்புகிறார்கள் [REF].    

உலகப் போர்களின் பாதிப்பு, இயற்கை சீற்றங்களின் பாதிப்பு, தொற்று நோய்களின் பாதிப்பு  என்று நம் நாட்டு மக்களுக்கு ஏதேனும் முன் அனுபவம் இருந்திருந்தால், இன்று கொரோனாவை எதிர்கொண்டிருப்பார்கள். இந்த வைரஸின் ஆபத்தை உணராமல், விழிப்புணர்வு இல்லாமல், இவ்வளவு மக்கள் பயணிக்கின்றனர். மேலும், ஆயிரக்கணக்கில் செல்லும் இவர்களில் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சென்றடையும் கிராமத்திலும் கொரோனா பரவலாம். இக்கட்டான இந்த நிலைமையை அரசு கவனிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர், மற்றும் பலர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில மாநிலங்களில், உணவு தானியங்களை வாங்க சென்ற மக்கள், தங்களின் பைகளை இடம் பிடிக்க வைத்துவிட்டு, கூட்டமாக கதை பேசுவது அவர்களின் விழிப்புணர்வின்மையை காண்பிக்கிறது. 

சீனாவில், இந்த வைரஸின் பாதிப்பால் லாக்டவுன் வந்த போது அந்த நாட்டு அரசின் செயல்பாடுகள் குறித்து, அங்கே வாழும் எனது நண்பர் பகிர்ந்துகொண்டது.


80000 மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில் கூட, காவல்துறை மக்களை அடிக்கவோ, துன்புறுத்தவோ இல்லை. அதற்காக, சீன மக்கள் அனைவரும் புத்தர்கள் அல்ல. நம் நாட்டை விட அதிக மக்கள் தொகை, சொல் பேச்சு கேட்காமல் திரியும் கூட்டம் என்று, பல இடையூறுகள் இருந்தும் அரசு பொறுமை காத்தது. மாறாக தெருத் தெருவாக சென்று நோயை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு பரப்பினர். பயப்பட வேண்டாம் என்று தைரியம் ஊட்டினர். பின்னர், பொது மக்களின் உதவியுடன் உள்ளூர் சோதனைச் சாவடிகள் அமைத்தனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்து இருக்கும் சோதனைச் சாவடிகள் வழியே மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்ல அனுமதித்தனர். வெளியே செல்லும் மக்கள், நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுவிடாமல் இருக்க, அவர்களின் GPS LOCATION யை பகிர்வதன் மூலம், கட்டுப்படுத்தினர். ஆனால், இரண்டு மாதங்கள் கால அவகாசம் இருந்தும், நோயை எதிர்கொள்ளும் இந்தியாவின் நிலை ஆச்சரியத்தை தருகிறது.” நன்றி: தீபக் செல்வகுமார் [REF].

Comments

  1. Where else you have mentioned about China's counter measure against covid-19 . where else i have brief idea about chinese communism govt .I hope you know People can't comment or protest against govt decision or action.
    At any cost violence against civilians are cannot be justified . But the point you have chosen is wrong my dear friend . That's my opinion about your write up.
    People should cultivate themselves . This situation is new for this century civilisation. when contagious outbreak is pandemic , they have no idea about causes. Right now we don't have choice unless to follow out govt measures.

    ReplyDelete
  2. Thank you for your comments and views.

    It's exactly the same thing I described in the post. This shutdown is very new to us, and we have little idea how to do it, how much we need to be careful about it, and what happens if we pursue it.

    Therefore, as I have always said, awareness is a stronger weapon than the lathi attack. In fact, I only took the Chinese model at the time of the lockdown, which my friend told me. Communism or socialism or whatever, but if something is good, why dont we adapt it, whether it is Chinese or North Korea? Creation of awareness impressed me. Lack of that, today a huge crowd shifting from metros to their villages. They are not aware of this pandemic. No idea, What would be the outcome if anyone of them is infected.

    ReplyDelete

Post a Comment

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

நைட்

அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2

The Art of War

The Sixth Extinction: An Unnatural History

Sapiens: A Brief History of Humankind

schindler's list