டீக்கடை பொருளாதாரம் - What is MDR - Merchant Discount Rate

அண்ணே…. ரெண்டு சமோஸா, ஒரு பருப்பு வடை, ஒரு ஃபில்டர்.. எவ்வளவாச்சி?

என்னடே புதுசா கேட்டுகிட்டு.. அதே 34 ரூவாதான்…

இந்தாங்கண்ணே.. சீக்கிரம் துட்ட எடுத்துட்டு மீதியை தாங்க. காலேஜ் போணும், பஸ் வந்துரும்..

ஏய்.. என்னைக்கும் இல்லாத அதிசயமா துட்டு தார. செல்போன்ல பேட்டியம் கீட்டியம்னு எதொ பண்ணுவளாடே.. என்னாச்சு.. போனு ரிப்பேர் ஆயிட்டோ?

அட போங்கணே.. கடுப்ப கிளப்பிகிட்டு.. பேட்டியம்,கூகிள்பே யூஸ் பண்ணினதே எதாச்சும் ஸ்க்ராட்ச் கார்டு, கேஸ்பேக் கிடைக்கும்னுதான்.. இனி அப்படி ஒன்னும் கிடைக்காது போல..

என்னடே அவனுகதான் எல்லா கடையிலயும், நிக்க முடியாம சரிஞ்சுட்டு நிக்கிற இந்த கார்டை வைக்க சொன்னானுக.. நீ என்னனா…

எணே அது “க்யுஆர் கோடு” ணே…

என்ன கருமமோ…

நான் அந்த அட்டைய ஸ்கேன் செஞ்சு துட்டு தந்தா, எப்பவாச்சும் கொஞ்ச துட்டு, இல்லன்னா லாட்டரி டிக்கட் மாதிரி ஒன்னு கிடைக்கும். லக்கு இருந்தா அதை சொரண்டும் போது துட்டு கிடைக்கும். அந்த துட்டு கிடைக்காது போலனு சொன்னேன்..

ஏன் டே கிடைக்காது? “க்யுஆர் கோடு” எப்பவும்போல வேல செய்யுதுல?

எணே, உங்களுக்கு சொன்னா புரியாதுனு தான் சொல்லல.. அதுக்குள்ள ஒரு கதை இருக்கு..

ஆமா, என்னடே சொன்ன? இன்னுமா லாட்ரிலாம் இருக்கு?

இது ஹைடெக் லாட்ரினே…

கதையை கேளுங்க..

500, 1000 ரூபாயை செல்லாதுனு சொன்னானுவல..

ஆஆஆமா….

அதெ மாதிரி எல்லா காசையும் செல்லாதுனு சொல்லிட்டான்னா… எல்லாருடைய துட்டும் பேங்குல மட்டும் தான் இருக்கும்.

விளங்கிரும்…

சொல்றத கேளுங்க..

சரி சொல்லுடே…

அப்ப நம்மட்ட எந்த காசும் இருக்காது.. ஒரு கற்பனையா யாருகிட்டயும் செல்போனும் இல்லனு வச்சுகோங்க..

செல்போனு இருந்தா ஸ்கேனு பன்னியாச்சும் துட்டு தருவான்.. இப்ப கடைக்கு டீ காப்பி குடிக்க வர்றவன் குடிச்சுட்டு என்னத்த தருவான்?

கரெக்ட்டு… இதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிச்ச அரசாங்கம், ஒரு பையனை உங்க கடைக்கு வேலைக்கு வைக்க சொல்லுது.. எதுக்குனா?…  நீங்க தானே வேலைவாய்ப்புகள் குறஞ்சுட்டுனு தண்டோரா போடுறீங்க.. அதான்.. சும்மா கிண்டலுக்கு சொன்னேன். கேளுங்க.. நான் டீ குடிச்சதும் பில் எவ்வளவு வருதோ, அந்த பையன் பில்லை எடுத்துட்டு நான் துட்டு வச்சுருக்குற பேங்குக்கு போவான். கொடுக்குற பில்லுக்கு ஏத்தாப்புல பேங்கு, என்னோட அக்கவுன்ட்ல பைசாவ புடிச்சுட்டு, அவன்ட்ட ஒரு டோக்கன் குடுக்கும். இப்ப அந்த பையன் குடுத்த டோக்கனை உங்க பேங்குல குடுப்பான். உங்க பேங்கு, டோக்கனுக்கு ஏத்தாப்ல உங்க அக்கவுன்ட்ல பைசாவ கூட்டிரும்.

இது, மூக்க தலைய சுத்தி தொட்ட கதையாலா இருக்கு..

என்னணே பண்றது.. நம்ம ரெண்டு பேர்ட்டயும் துட்டு இல்லலா.. இது தான் ஒரே வழி.. கடைக்கும் பேங்குக்கும் நீங்க அலைய முடியாதுலாணே…

ஆமா… மாங்கு மாங்குனு ரெண்டு பேங்குக்கும் ஓடுற இந்த பையனுக்கு சம்பளம் யாரு குடுப்பா?

உங்க கடைக்கு வேலை பாக்குற பையனுக்கு நீங்க தான் சம்பளம் குடுக்கனும்..

கடைக்கு வர்றவன் செவனேனு டீயை குடிச்சுட்டு துட்ட தர்றத விட்டுட்டு.. அதுக்கு ஒருத்தனை வேலைக்கு வச்சு அவனுக்கு சம்பளம் வேற..

என்னணே பண்றது.. நம்ம ரெண்டு பேர்ட்டயும் துட்டு இல்லலா..

டேய்… திரும்பயுமா!.... மேல சொல்லு… எவ்வளவு சம்பளம் குடுக்கணும்குறதையும் நீயே சொல்லிரு..

உங்களுக்கு 5000 கிடைச்சா.. அந்த பையனுக்கு 100 ரூபா குடுத்துருங்க..

சரி.. மேல சொல்லு… அது சரி.. கடைக்கு ஒரே நேரத்துல பத்து பேரு டீ குடிக்க வந்துட்டா, இந்த பையன் எப்படி எல்லா பேங்குக்கும் மாறி மாறி ஓடுவான்?

கரெக்ட்டா புடிச்சுட்டிங்கணே.. இன்னொன்னு சொல்றேன்.  கொஞ்சம் கொழப்பும்.. இருந்தாலும் கேளுங்க..

உங்களுக்கு “க்யுஆர் கோடு” உங்க பேங்கு தான தந்துச்சு?

அட ஆமாடே..

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? உங்க கடைக்கு வர்றவங்க ஸ்கேன் பண்ணி, உங்களுக்கு கிடைக்குற துட்டுல கொஞ்சத்தை உங்க பேங்கு எடுத்துக்கும்..

சண்டாளன்!!! என்ட்ட அத சொல்லவே இல்லடே..

உங்க பேங்குக்கும் என் பேங்குக்கும் ஒரு பையன் ஓடினான்ல.. அதே மாதிரி ஒவ்வொரு கடைக்கும் தேவையான ஆள சப்ளை செய்யிற தரகர் தான் NPCI (National Payments Corporation of India). UPI, RuPay னு கேள்விபட்டுருக்கீங்களா?? இவுகளாம் நம்ம தரகர் கண்ட்ரோல்ல தான்… ஓடி ஓடி உழைக்கிற பசங்க யாருனா.. பேட்டியமும், கூகிள்பேயும்.. அதெ மாதிரி இன்னும் கொஞ்சபேரும் இருக்காங்க…

ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்குடே…

உங்கட்ட இருந்து எடுத்த பணத்துல கொஞ்சத்தை உங்க பேங்கு வச்சுக்கும். மீதியை, ஸ்கேன் செஞ்சவங்களுக்கும், தரகருக்கும் குடுத்துரும். இப்ப தரகர்.. அவனுக்கு கிடைச்சதுல கொஞ்சத்த பேட்டியம், கூகிள்பே க்கு குடுக்கும். பேட்டியமும், கூகிள்பேயும் தரகர்ட்ட இருந்து வருமானம் நல்லா வந்துச்சுனா, எங்களுக்கு ஸ்கராட்ச் கார்டு, கேஸ்பேக்குனு தருவானுக..

இப்பவும் தர்றானுகள்ள..

உங்க பணத்துல கொஞ்சத்தை உங்க பேங்கு எடுத்துக்கும்னு சொன்னேன்ல.. அதை எடுக்க கூடாதுனு அரசாங்கம் சொல்லிட்டு…

அப்பாடா.. அரசாங்கம் ஆட்டைய போடும்னு மட்டும் தான் நினைச்சேன்.. தரவும் செய்யுமா….

எணே.. துட்டு குடுக்காம அந்த பையன் எப்படி ஓடி ஓடி உழைப்பான்… அவனுக்கே துட்டு கிடைக்கலனா எப்படி ஸ்கராட்ச் கார்டு, கேஸ்பேக்குலாம்????

ஏண்டே திடீர்னு அரசாங்கம் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கு?

நீங்க நல்லவங்க.. “க்யுஆர் கோடுக்கு பேங்கு சார்ஜ் செஞ்சும்.. யூஸ் பண்ணுறீங்க.. உங்க வருமானத்தை அரசாங்கத்துக்கு சொல்லிடுறீங்க.. நிறைய கடைகாரங்க “க்யுஆர் கோடுக்கு பேங்கு சார்ஜிங்கு இருக்குறதுனால யூஸ் பண்றதே இல்லை. அவங்களுக்கு எவ்வளவு வரவு செலவுனு அரசாங்கத்துக்கு தெரிஞ்சுக்கனும்ல.. அதான் எந்த சார்ஜிம் எடுக்க கூடாதுனு அரசாங்கம் சொல்லிட்டு…

எடே இஞ்சினியருக்கா படிக்க?..

கருமம் அதை யெவன் படிப்பான்.. நான் சென்ட் சேவியர்ஸ்ல எக்கானிமிக்ஸ் படிக்குறேணே.. சரிணே பஸ் வந்துட்டு.. நாளைக்கு பாப்போம்..

பாக்லான்டே…


Comments

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?