ROBO 2.0 கதிர்வீச்சின் மாயை (Can Bird Die Due to Radiations)

கொத்து கொத்தாக செத்த பறவைகள் !!!!

பொய் தகவல் நம் சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த இன்று வரை தவறியதேயில்லை. அனுதினமும் அரசியல் தொடங்கி உணவு வரை ஒவ்வொரு நாளும் பல பொய் தகவல்கள் சமூக ஊடகங்களான ஃபேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (whatsapp), இன்ஸ்டாக்ரம் (Instagram), ட்விட்டர் (twitter) மூலமாக  பரவுகின்றன. இதில் விசேஷம் என்னவென்றால், சில தகவல்கள் பொய்யென மனித அறிவுக்கு தெரிந்தாலும்,  மனம் உண்மையென ஏற்றுக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, நமக்கு ஒரு அரசியல் கட்சி பிடித்திருந்து, அந்த கட்சிக்கு சாதகமாக ஒரு பொய் தகவல் பரவும்போது, பொய்யாகவே இருந்தாலும் நம் மனம் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறது. “முஸ்லிம் நபர் ஒருவர் இந்து ஒருவரால் தாக்கப்பட்டார்” என்ற தகவல் ஒரு இந்து ஆதரவாளர்க்கு கிடைக்கும்பொழுது, அதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பதை ஆராயப்படாமலே, அந்த தகவல் நம்பப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த, ரஜினிகாந்த் நடித்த அறிவியல் புனைவு சார்ந்த படம், எந்திரன் 2.0. அதில், செல்போன் டவரிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சால், குருவிகள், பறவைகள் என பல சிறிய உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக காட்டப்பட்டது. திரைப்படமாக இருப்பதால், அதுவும் ஒரு அறிவியல் புனைவு சம்பந்தப்பட்ட படமாக இருப்பதால், அந்த படத்தின் திரைக்கதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. ஏனென்றால் திரைப்படங்களில் காட்டப்படும் விஷயங்கள் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து, தமிழகத்தின் முன்னணி செய்தி நிறுவனங்கள் (news18 [1], புதியதலைமுறை, சமயம் [3] மற்றும் பல) ஒரு செய்தியை பதிவு செய்திருந்தது. “கொத்து கொத்தாக சாகும் பறவைகள்” என்று ட்விட்டரில் புகைப்படத்துடன் ஒரு செய்தி. வெளியான சில நொடிகளிலே பலரால் செல்போனிலும், லேப்டாப்பிலும் வேகமாக ஃபார்வர்ட் பொத்தான்கள் அழுத்தப்பட்டு பரப்பபட்டன. செய்தியில் எவ்வளவு நம்பகத்தன்மை உள்ளது என்று யோசித்தவர்களின் எண்ணிக்கை நூறுகளின் விளிம்பில் தான் இருந்திருக்ககூடும். உதாரணத்திற்கு, செல்போன் நிறுவனங்கள்  அனைத்தும் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளின் கீழும், WHO என்னும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படியும் இயங்கிக்கொண்டிருக்கையில், கதிர்வீச்சுகளால் அதுவும் செல்போன் உமிழும் கதிர்வீச்சுகளால் பறவைகளின் உயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா? என்று மனதிலேனும் ஒரு கேள்வி  எழுந்ததாக தெரியவில்லை.

ஒவ்வொரு கதிர்வீச்சிற்கும் ஒரு ஆற்றல் இருக்கும். கதிர்வீச்சின் ஆற்றல்களை “electron volt” என்னும் அலகால் அளவிடுவார்கள்.  பொதுவாக, X-ray என்னும் கதிர் வீச்சின் ஆற்றல், புலப்படும் ஒளியின் (Visible light) ஆற்றலை விட 100 மடங்கிலிருந்து லட்சம் மடங்கு வரையும், புற ஊதா கதிர் வீச்சின் ஆற்றல் 100 மடங்கு வரையும் இருக்குமாம். ஆனால், கைபேசியில் பயன்படுத்தபடும் கதிர்வீச்சின் ஆற்றல், புலப்படும் ஒளியின்  ஆற்றலில் ஆயிரத்திலிருந்து பத்து லட்சத்தில் ஒரு பங்காம். இத்தனை குறைவான ஆற்றல் கொண்ட கதிர்வீச்சு நம்மை எந்த விதத்தில் பாதிக்கும்?

இன்னும் இதை வேறு விதமாக கூற வேண்டுமானால், சூரிய கதிர்வீச்சின் சக்தி பூமியில் விழும்பொழுது, ஒரு சதுர மீட்டருக்கு 250-1000 watts என்று இயற்பியலாளர்கள் கூறுகிறார்கள். நம் வீட்டில் 5W, 10W பல்புகள் பயன்படுத்தியிருப்போம். உதாரணத்திற்கு 1W பல்பு, ஒரு நொடி எரிவதற்கு எவ்வளவு ஆற்றல் பயன்படுத்துகிறதோ, அதைதான் “WATT” என்று குறிப்பிடுவார்கள். அப்படி என்றால் 5W  பல்பு ஒரு நொடி எரிவதற்கு பயன்படுத்தும் ஆற்றல், 1W பல்பை காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாகும். இதனை வைத்து பார்க்கும் போது, பூமியில் ஒரு சதுரமீட்டர் பரப்பளவில் விழும் சூரிய கதிர்வீச்சின் ஆற்றல், 5W  பல்பை, 50-200 நொடிகள் வரை எரிய வைக்கும்.

கைபேசி கதிர்வீச்சின் சக்தி எவ்வளவு என்று பார்த்தால், சதுரமீட்டர்க்கு 0.0007 WATT, சூரிய கதிர்வீச்சை ஒப்பிடும்போது மிகக்குறைவு. தினமும் வேலைக்கு சுற்றி திரியும் நம் உடம்பு சூரிய கதிர்வீச்சையே எதிர்கொள்ளும் போது, கைபேசியின்  கதிர்வீச்சை எளிதாக ஏற்றுக்கொள்ளும். மற்றும் X-Ray போன்ற கதிர்வீச்சுகள், நம் உடம்பின் அனுக்களின் எலக்ட்ரான்களை கீச்சு கீச்சு மூட்டும் அளவிற்கு ஆற்றல் கொண்டவை. இவ்வாறு கீச்சு கீச்சு மூட்டீயும், சில நேரங்களில் அனுக்களின் எலக்ட்ரான்களை கோப படுத்தியும் தான் X-Ray நம் உடம்பில் முறிந்த எழும்புகளை படம் பிடிக்கின்றன. ஆனால், கைபேசியின் கதிர்வீச்சு ஆற்றலால், நம் உடம்பின் எலக்ட்ரான்களை அசைத்து கூட பார்க்க முடியாது.

சில தன்னல வழக்குகள் கதிர்வீச்சு தொடர்பாக நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டன. அலகாபாத் ஹைகோர்ட்டின் உத்தரவுப்படி. 13 பேர் (விஞ்ஞானிகள், மருத்துவர்கள்) கொண்ட குழு தனது நீண்ட ஆராய்ச்சிக்கு பின்னர் 55 பக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில் கைபேசியின் கதிர்வீச்சால் எந்த பாதிப்பும் இதுவரையில் இல்லை என்றும், மற்றொரு குழு, இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள அனைத்து கைபேசி நிறுவனங்களும் WHO வின் வழிகாட்டலின் படியே இயங்குகின்றன என்றும் கூறினார்கள்.

ஒரு பறவை கதிர்வீச்சினால் இறக்கிறது என்றால், கதிர்வீச்சின் ஆற்றலால் உண்டாகும் வெப்பம் தாங்காமல் இறக்கலாம். ஆனால், நாம் பார்த்த வரையில், வாழும் உயிரினங்களில் எந்த பாதிப்பையும் உண்டு பண்ணும் ஆற்றல்  கைபேசியின் கதிர்வீச்சுக்கு இல்லை என்பதே தெரிய வருகிறது [2], [4].























Comments

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?