அட்டவணை - A Married Woman's Timetable - part-5

கவிதையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கவும்.
உப்பு கரிச்ச தோசை கூட
சிரிச்சுகிட்டே சாப்பிட்டீக
எந்திரிக்கேன்னு இடிச்சிவிட
கண்டுக்காம விட்டீக
சூட்டுள்ள கரண்டி சுரீர்னு சுட்டுவிட
தெரிஞ்சேவா பட்டுதுன்னு தானே தடவிக்கிட்டீக

ஆனா,
உரிமையில நான் கேக்க
ஒத்த விசயம் புடிக்காம
ஒத்தயாளா தவிக்க விடுறீக………..

புள்ள பிறந்து ஆறு மாசம்,
அதுக்கு முன்ன ஆறு மாசம்னு,
சேத்து ஒரு வருஷம்நீங்க இல்லாம இருக்க
முடியுமானு மனசுக்குள்ள நினச்சு
தன்னந்தனியா தெவங்கிருக்கேன்.

-    நிகழ்நிலைப் படுத்தப்படும் என் இறப்பு வரை
************************************************************************************************************************


Comments

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?