அட்டவணை - A Married Woman's Timetable - part-4
கவிதையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கவும்.
பல நேரம்,
நல்லா உங்கள தூங்க விட்டு,
குறட்ட சத்தம் கேட்டுபுட்டு,
சுண்டு விரல் கொண்டு லேசா தொட்டு,
மணி நேரம் தூங்கிறதுண்டு…………….
சில நேரம், சுண்டு விரல் தொட்டதுக்கும்
சிலுப்பிக்கிட்டு நீங்க தூங்க,,
உங்க மூக்கு விடும் மூச்சு காத்து வாசம் புடிச்சு
கண்ணயர்ந்து போனதுண்டு … ……….
மூச்சு காத்தும் வராதபடிக்கு
முதுகு காட்டி நீங்க படுக்க,
கட்டியிருக்கும் சாரத்து முனிய தொட்டு,
தூக்க சுகம் கொண்டதுண்டு………
நான் செஞ்ச தப்ப எல்லாம்
மறக்க மாட்டேன்னு முறுக்கிகிட்டு,
வேத்தாளா நினைச்சுக்கிட்டு,
எனக்கென்னனு பேசிக்கிட்டு
வெடுக்குன்னு போற நேரம்,
வேதனய எனக்குள்ளயே சொல்லிக்கிட்டு
வெறுத்துப் போயி திரிஞ்சிருக்கேன்……………….
படம் போட ஒன்னும் இல்ல,
நீங்க பேசாம எம்மனசு படும் வலிய சொல்ல,
முளைச்சு வரும் முகத்து பரு தவிர
வேற யாரும் எங்கிட்டயில்ல.
என் முகத்த தொட்டு குடுக்கும்
உங்க முத்தம் சத்தம் போதும்,
நான் பட்ட ரணமும் போகும்
கதறி அழுத கணமும் போகும்,
மறுகணமே எல்லாமும் மறந்தும் போகும்.
பைத்தியமா நான் கிடக்கேன்,
புரிஞ்சுராதானு காத்திருக்கேன்…….
என் மனசும் மனசுதான்னு தெரியல தான்,
இருந்தாலும் பொருத்திருக்கேன்.
************************************************************************************************************************
கவிதையின் ஐந்தாம் பகுதியை இங்கே வாசிக்கவும்.
Comments
Post a Comment