அட்டவணை - A Married Woman's Timetable - part-3
கவிதையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கவும்.
என் கண்ணம்மா நீ தான்னு சொல்ல
வெகு நாளா காத்திருக்கேன்………….
வருசம் ஒன்னு தாண்டுதேன்னு
கண் கலங்கி போயிருக்கேன்!!!!!!!
அத்தனையும் பாத்துப்புட்டு எங்கம்மா சொன்னா,
எத்தனயோ செஞ்சிருக்கோம்
எட்டுத்திக்கும் கூட்டிப் போயிருக்கோம்,
என்னத்துக்கும் அசறாத இவ மனசு
இன்னைக்கு அவனயே உலகமால நினச்சிருக்கா!!!!!!!
அந்த நேரம் நினச்சுகிட்டேன்
கண்ணே மணியேனு கொஞ்சி பேசவில்ல,
தங்கமே, வைரமேனு அள்ளியணச்சதில்ல,
மருகி கிடக்கும் மனச சொல்ல
என் அப்பாம்மாவே நீங்க தான்னு உருகுறத … …….
சண்ட எதுவும் புடிக்கையிலே,
வீம்போ வீரமோ நீங்க காட்ட,
உங்க வாசம் புடிச்சா போதும்,
வேதனைய தீத்துக்குவேன்!!!!!!
நாலு நாள் பேசாட்டியும்
நல்லா தான் இருப்பீங்க……
பேசாத ஒவ்வொரு நொடியும்,
உதிரம் உறையும் அளவு அழுறேங்க………….
பேசி தீர்க்க நினச்சு பல வகையில
முயற்சி செஞ்சிருக்கேன்………….
நீங்க கேக்காம வீஞ்சு பேச
வாயடச்சு உடஞ்சிருக்கேன்!!!!!!
சண்டையோட படுக்கையிலே,
நிம்மதியா நீங்க தூங்கையிலே,
விடிய விடிய முழிச்சுருந்தும்,
தொட்டுப் படுக்காம
துணுக்கு கூட தூக்கம் இல்ல………
************************************************************************************************************************
கவிதையின் நாங்காம் பகுதியை இங்கே வாசிக்கவும்.
Comments
Post a Comment