அட்டவணை - A Married Woman's Timetable - part-2
கவிதையின் முந்தைய பகுதியை இங்கே வாசிக்கவும்.
வரிஞ்சு கட்டி வேலை பாக்க…………..
கேட்ட போதெல்லாம்
குடுக்க முத்தம் சுகம் போதுமே தான்,
இருந்தும் கேக்காம குடுக்கட்டுமேனு
எம்பேச்ச கேக்காம மனசு
கணங்கணமா காத்திருக்கு…………..
முகத்த நீங்க சுழிச்சாலும்,
எக்கி எக்கி முத்தம் கொடுப்பேன்,
பதிலுக்கு நீங்க தார முத்த ஈரம்
துடைக்காம வச்சிருப்பேன்.
வகை வகையா படம் ஏத்துனாலும்,,
போகாத பொழுதுனாலும்,
கூட நீங்க இல்லாத நேரம்
பாக்காம அணைச்சு வப்பேன்.
கம்ப்யூட்டர் முன்ன மணி கணக்கா
நீங்க இருக்க
உங்க காலடில நான் கெடப்பேன்………….
உங்க வயிர தடவிக்கிட்டே
வக்கணையா படுத்திருப்பேன்.
விந்தயா தான் இருக்கு
என் அம்மைக்கு,
விசித்திரமா நான் நடக்கையிலே ! !!
ஆழிச்சாட்டியம் பண்ணி ஆட்டிப் படைச்ச நான்,
உங்க அன்புக்கு அடிபணிஞ்சு போகையிலே!!!
32 வருஷம் கட்டிப்பிடிச்சு படுத்த
அம்ம கூட இருந்தும்,
நீங்க படுத்த பக்கம் தேடி வாரேன்……….
ரொட்டி சுட்டு தானு அதிகாரமா
தின்ன நான்,
பூரி சுட்டு சாப்பிடுறேன்………..
முத நா கண்ட கனவ கூட,
கலையாம கூறிடுறேன்……………
******************************************************************************
கவிதையின் மூன்றாம் பகுதியை இங்கே வாசிக்கவும்.
******************************************************************************
கவிதையின் மூன்றாம் பகுதியை இங்கே வாசிக்கவும்.
Comments
Post a Comment