ஹிலாரி கிளிண்டனும் ரகசிய இமெயிலும் (Hillary Clinton - behind the screen) - 1



2016ல் நடந்த அமெரிக்க தேர்தலில் ஹிலாரி கிளிண்டனும், டொனால்டு ட்ரம்பும், போட்டி போட்டனர். ட்ரம்புக்கு அரசியல் அனுபவம் இல்லாத சூழலில், களத்தில் குதித்திருந்தார். இதனால், அவருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்புகள் இருந்தன. ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு அவர் மீது பல விமர்சனங்கள் வைத்தன. அவரது முந்தைய வாழ்க்கை, பெண்கள் தொடர்பு, ஹாலிவுட்டின் லீலைகள் என்று பல செய்திகள் வெளிவந்தன. ஹிலாரி கிளிண்டன் கண்டிப்பாக வெற்றி பெறுவார், அடுத்த அமெரிக்க அதிபர் அவர்தான் என்று பல கருத்துகணிப்புகள் கூறி இருந்தன. இந்த சூழலில், ஹிலாரியை பற்றிய செய்தியொன்று பூகம்பமாக வெடித்தது. “ரகசிய செர்வர் (secret server)” ஒன்று அவர் வீட்டின் அடித்தளத்தில் இயங்கியது தெரியவந்தது.

2012ல் லிபியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை (house Benghazi) ஹவுஸ் பென்காசி குழு விசாரித்து வந்தது. 2012ல் வெள்ளை மாளிகையில், அன்றைய அதிபர் பராக் ஒபாமாவிற்கு முதன்மை செயலாளர் (Secretary) ஆக வேலை பார்த்தவர் ஹிலாரி கிளிண்டன். இதுபோன்ற தாக்குதல் நடக்கும்போது, அதுவும் இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், வெள்ளை மாளிகையில் மூத்த அலுவலர்களின், இ-மெயில்களை விசாரணை குழு சோதனை செய்வது வாடிக்கையே. ஏதாவது விடயம் கிடைக்குமா என்று முறையான சோதனை நடப்பது உண்டு. இதனால் ஹிலாரி கிளிண்டனின் இ-மெயிலுக்கு அன்றைய காலகட்டத்தில் வந்துபோன இ-மெயில்களை சோதனை செய்ய விசாரணை குழு முடிவு செய்தது. அப்பொழுதுதான், கிளிண்டனின் அலுவலக இ-மெயிலில் எந்த இ-மெயிலும் இல்லை என்பது தெரியவந்தது. உடனே, ஹிலாரி கிளிண்டனை தொடர்பு கொண்ட குழு, உங்கள் IDயில் எந்த இ-மெயிலும் இல்லையே, எல்லாம் எங்கே போனது என்று கேட்க, கிளிண்டன் வசமாக சிக்கிக்கொண்டார்.

விசாரணையை துரிதப்படுத்த, மெதுவாக கிளிண்டனின் அடித்தள ரகசிய SERVER தெரியவந்தது. முதன்மை மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு அமெரிக்கா, பாதுகாப்பான இமெயில் ID வழங்கும். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் விஷயங்கள் வெளியே கசிந்து விட கூடாது, மற்றும் உயர்நிலை ரகசியங்களை வெளி நபர்கள் திருடி விடக்கூடாது என்பதற்காக. உலகத்திற்கே பஞ்சாயத்து பண்ணும் அமெரிக்காவிற்கு, அது மிக முக்கியமான ஒன்றும் கூட.


கிளிண்டனோ தனக்கு கொடுக்கப்பட்ட இ-மெயில், அவர் பதவியில் இருந்த காலத்தில் பயன்படுத்தவே இல்லை. தனக்கென்று, ஒரு தனி இமெயில் ID வைத்து அதன் மூலம், மற்ற அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஒபாமா கூட அந்த  IDயில் தான் அலுவலக விஷயங்களை பகிர்ந்துள்ளார். பாதுகாப்பு விஷயங்களில் இத்தனை கவனம் செலுத்தும் அமெரிக்கா, இதை எப்படி கவனிக்காமல் விட்டது? சில அதிகாரிகள் 2011ல் கிளிண்டனிடம் நீங்கள் செய்வது தவறு, அலுவலக IDயை பயன்படுத்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், தனக்கு இருந்த அதிகார பலத்தால் கிளிண்டன் அவர்களின் வாயை அடைத்துவிட்டார். கூடுதலாக, அதைப் பற்றி பேசவோ விவாதிக்கவோ கிளிண்டன் யாரையும் அனுமதிக்கவில்லை. இந்த மாதிரியான விஷயங்களை கவனிக்க ஒரு அதிகாரியை (Inspector General) வெள்ளை மாளிகை நியமிக்கும். ஆனால், கடைசி வரை அந்த பதவிக்கு நிரந்தரமா யாரையும் நியமிக்கவில்லை. ஒபாமாக்கு இது தெரியுமா? (தொடரும்)… 


Comments

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

நைட்

அண்ணே! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா! Part 2

The Art of War

The Sixth Extinction: An Unnatural History

Sapiens: A Brief History of Humankind

schindler's list