ஹிலாரி கிளிண்டனும் ரகசிய இமெயிலும் (Hillary Clinton - behind the screen) - 2
( தொடரின் பகுதி - 1 ஐ இங்கே வாசிக்கவும் ) இமெயில் விஷயங்களை கண்காணிக்க ஒரு அதிகாரியை தற்காலிகமாக நியமித்திருந்தார், ஒபாமா. (இதுவும் ஒருவேளை ஹிலாரி கிளிண்டனின் தலையீட்டால் இருக்குமோ?) பரவலாக அடுத்த அதிபர் ஹிலாரி தான் என்ற செய்தி இருந்ததால், பல அதிகாரிகள் ஹிலாரியிடம் மோத பயப்பட்டனர். இந்த சூழலில், நியமிக்கப்பட்ட தற்காலிக அதிகாரியும் தனக்கு அளிக்கப்பட்ட குறைந்த அதிகாரத்தைக் கொண்டு ஹிலாரியிடம் மோதுவதை தவிர்த்தார். பெங்காஷி விசாரணை குழுவின் கிடுக்குபிடியால் கிளிண்டன், 30,490 இமெயில்களை ஒப்படைத்தார். மீதி 31,839 இமெயில்களை தனது தனிப்பட்டது என்று கூறி தர மறுத்துவிட்டார். முதற்கட்ட விசாரணையில், அரசு சார்ந்த எந்த விஷயங்களையும் இமெயிலில் அனுப்பவில்லை என்று கூறிய அவர், சில அதிர்ச்சி தரும் பதில்களையும் கூறினார். பொதுவாக அலுவலக கோப்புகளில் சில குறியீடுகள் இருக்கும். அவசர நேரங்களில் கோப்புகளை தேடுவதற்கும், முக்கிய கோப்புகளை தனியாக வைக்கவும் அது உதவும். இத்தகைய விஷயங்கள் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஹிலாரியின் இமெயில்களை சோதனை செய்ததில், “C” என்று குற