Posts

Showing posts from 2020

தில்லி சலோ - Unprecedented Farmer Protest

Image
மூன்று விவசாய மசோதாக்களை திரும்ப பெற ஆகஸ்டில் தொடங்கிய போராட்டம் இன்றளவும் அதன் தன்மை குறையாமல் நடந்து கொண்டிருக்கிறது . அப்படி அந்த மசோதாக்கள் என்னதான் சொல்கிறது , எதற்காக இத்தனை எதிர்ப்புகள் ? உண்மையில் விவசாயிகள் தான் இந்த போராட்டங்களை நடத்துகிறார்களா ? இல்லை , ஆளுங்கட்சி சொல்வது போல சீனா மற்றும் பாகிஸ்தானின் தூண்டுதலால் நடக்கிறதா ? விவசாயிகளை , காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று வர்ணம் பூச அரசாங்கம் நினைத்தது எதற்காக ? நிராயுதபாணிகளான விவசாயிகளை தாக்கியபோது இங்கிலாந்து , அமெரிக்கா , ஆஸ்திரேலியா , கனடா என்று உலக நாடுகள் கடுமையாக விமர்சித்தது ஏனோ ? முடிவுகள் தவறோ சரியோ , தான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் வரலாற்று சிறப்புவாய்ந்தவை என்று நம்பவைப்பதில் வெற்றிக்கொடி நாட்டியவர் மோடி என்பதை   நமது முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தோம் . மசோதாவை, விவசாயிகளுக்கான “பரிசு” என்று முதலில் கூறிய பிரதமர், பின்னர் அதையே “வரலாற்று” சிறப்புவாய்ந்த மசோதா என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  நடுத்தர மக்கள் மற்றும் , நடுத்தர   வாழ்வை

குறையா புகழ் மோடி? ஒரு விமர்சனம் : Strong Image of Modi

Image
  “நானே ராஜா நானே மந்திரி” என்றிருந்த பல உலக தலைவர்களை பதம் பார்த்துவிட்டது, கொரோனா. ருஷியா தொடங்கி மெக்சிகோ வரை நாட்டின் வளர்ச்சி முடங்கியதால், மக்கள் மத்தியில் தலைவர்கள் பற்றிய நன் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதை, சில தனியார் நிறுவனங்கள் மக்களிடம் எடுத்த கணக்கெடுப்பிலும் உறுதி செய்கிறது. ஆனால், என்னதான் உலகளவில் நடந்தாலும், இந்தியாவில் “நானே ராஜா நானே மந்திரி” யாக இன்றளவும் இருப்பவர், பிரதமர் மோடி மட்டுமே!! மோடி புகழ் பாடுகிறான், இவன் பிஜேபி காரன், சங்கினு நினைச்சு பதிவை வாசிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.

கருப்பு – நிற வெறி: Racism at Doorstep

Image
திராவிடன், ஆரியன் என்று அரசியல் பேசும் பதிவு அல்ல இது. நம் தினசரி வாழ்வில் நம்மை அறியாமல் நாம் பேசும் வழக்கு மொழியை பிரித்து ஆராயும் ஒரு முயற்சியே இந்த பதிவு. கருப்பர்கள் என்று சொல்வதில் மட்டும் இல்லை நிறவெறி. கருப்பை வெறுப்போடு ஒதுக்கும் ஒவ்வொரு அசைவுகளிலும் இருக்கிறது நிறவெறி. அண்மையில், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாயிடு என்னும் கருப்பின இளைஞன் போலீசால் கொல்லப்பட்டதால், சமூக வலைத்தளங்களில் “BlackLivesMatter” என்ற ஹாஷ்டாக் பிரபலமானது. இந்த ஹாஷ்டாக்கை பதிவிட்டதில் எத்தனை பேர் தன் மகன்களுக்கு கருப்பு மருமகள்களை தேடுபவர்கள், எத்தனை இளைஞர்கள் தங்களுக்கு கருப்பு கேர்ள்ஃப்ரன்டை  தேடுபவர்கள் என்று தெரியவில்லை.

லாக்டவுன் குமுறல்கள்

Image
கடந்த மூன்று மாதங்களில் பல சம்பவங்கள் புதிது புதிதாக நடந்து விட்டன. நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனா முதல் நெய்வேலி எரிவாயு நிலைய வெடிப்பு வரை அனைத்தும் அடுத்து அடுத்தாற் போல. இடைப்பட்ட காலங்களில் இன்னும் நிறைய. மூச்சு விட்டு ஆசுவாசப் படுத்துவதற்குள் ஆசனவாய் மரணம். வருடங்கள் கடந்த பின்னும் , இன்னும் ஆசிபாவின் மரணத்தை மறக்க மறுக்கும் மனதை ரணமாக்கும் விதத்தில் , இன்றும் தமிழகத்தில் சின்னஞ்சிறுசுகளின் சிறகுகள் அடித்து நொறுக்கபட்டு பிணமாக்கப்பட்டிருக்கிறது. பக்கத்து மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இது போன்ற ஒரு மரண வீட்டின் ஓலம் கேட்டு , இனி இப்படி ஒரு அவலம் நடப்பின் , எண்ணி 21 ஆம் நாளில் சிறுமியை சிதைத்த அந்த சவத்தின் சிரம் தூக்கிலிடப்பட்டு வீழ்த்தப்படும் என்று ஆணையிட்டார். ஆனால் ,  நம் மாநில முதல்வர் காதுகளில் நடந்த ஓலம் விழாததற்கு காரணம் போட்டிருந்த மாஸ்க் தான் என்று நாளை செய்தி வந்தாலும் ஆச்சர்யப்படுத்துவதற்கில்லை. அதை , ஆம் என்று வாதாட அரசு வக்கீலைக் கூட இந்நேரம் அப்பாய்ண்ட் செய்திருப்பார்கள்.

எவ்வாறு ஏமாறுகிறோம், எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம் - Humans Uncontrollable Irrational Behavior

Image
பகுத்தறிவோடு முடிவெடுப்பதாக நினைத்து, நம்மை அறியாமல் சிக்கிக்கொள்ளும் தருணங்கள் பற்றிய பதிவுதான், “எவ்வாறு ஏமாறுகிறோம், எவ்வாறு ஏமாற்றப்படுகிறோம்” (எடுத்துக்காட்டாக திருமணம், சும்மா சொன்னேங்க). ஏதோ ஒருமுறை தெரியாமல் நடந்த ஏமாற்றத்தை பற்றியது அல்ல, ஒவ்வொரு முறையும் நாம் தெரிந்தே ஏமாறுவதை பற்றியது. பெரும் நிறுவனங்கள், உளவியல் ரீதியாக நம்மை ஆட்கொண்டு,  அவர்களின் பொருட்களை வாங்க,  நாம் வெளிப்படுத்தும் விருப்பத்தின் மூலம், தன் சந்தை மதிப்பை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள். ஆப்பிள் முதல் மெக்டொனால்டு வரை இந்த சூட்சமத்தை எவ்வாறு தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள்?, ஒரு பொருளுக்கு அவர்கள் நிர்ணயிக்கும் விலை தகுதியானதுதான் என்று நம்மை எப்படி நம்ப வைக்கிறார்கள்? ஒருமுறை பரவாயில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் எவ்வாறு ஏமாறுகிறோம்? இப்படி, பல கேள்விகளுக்கான விடையை பார்க்கலாம்.

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Image
விஜய்சேதுபதிக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இருக்கு, ஆனா, எப்படி சம்பந்தப்பட்டிருக்கார்னு பதிவோட முடிவுல தான் முழுசா தெரியும். சினிமா காரங்க பெயர் வச்சாதானே மக்கள் வாசிக்குறாங்க. அதான் டைட்டில அப்படி வச்சேன்!!!!  பொறியியல் படிச்சா வேலை கிடைக்காது, அது ஒரு டுபாக்கூர் துறைனு எல்லாம் காதுல விழும் வார்த்தைகள், பொறியியல் பற்றிய அறிவு இல்லாதவர்கள் பிதற்றியது என்று தான் சொல்லனும். பொறியியல் கணிதத்தால் ஆன அழகிய கவிதை, எல்லாராலும் படிக்க இயலாது. சொற்ப மக்களுக்கு படிக்க தெரிஞ்சாலும், புரிஞ்சுக்க முடியாது. இதனால் தான் இத்தனை விமர்சனம். பொறியியல் படித்தவன் என்ற பெருமிதத்தோடு, அதன் ஒரு அங்கமான, இன்று உலகத்தை ஆட்டி படைக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் (Artificial Intelligene) பற்றிய பதிவு தான் இது. மனித மூளையின்   பலத் தால் ஈர்க்கப்பட்டு, கணினி என்னும் மின்னணு கருவிக்கு மூளையின் செயல்திறனை கொடுக்க முயற்சிக்கும் ஒரு துறை தான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ் .

THAPPAD – A SLAP – சவுக்கடி (தமிழ் ரீமேக்ல டைட்டில கொஞ்சம் அப்படி இப்படி மாத்திக்கலாம்)

Image
அறிவியலில் “கியாஸ்” (CHAOS) என்று ஒன்றை சொல்வார்கள். அப்படினா, திருநெல்வேலியில் பட்டாம்பூச்சி சிறகடிச்சா, திருத்தணியில் புயல் அடிக்குமாம். ஒரு பெரிய விளைவுக்கு எங்கோ நடக்கும் சின்ன நிகழ்வு காரணமாய் இருக்கும் என்பது தான் அர்த்தம். உதாரணமாக, தசாவதாரம் படத்தின் தொடக்கத்தில் பெருமாள் சிலையை கடலில் போட, இதனால் கடலில் ஏற்படும் சிறு இடையூறுகள், படத்தின் முடிவில் சுனாமி வருவதுபோல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆமா, இதுக்கும் இந்த படத்திக்கும் என்ன சம்பந்தம்? பார்ப்பதற்கு சிறியதாக தெரியும் இந்த படத்தின் ஒரு காட்சியின் முடிவு, படத்தை மட்டுமல்ல சமுதயாத்தையே புரட்டி போடுவதாய் அமைகிறது. படம் தொடங்கி 5 நிமிஷம் போன  style அ பாத்து , நெறய family கதைகள கனெக்ட் பண்ற ஒரு படமா இருக்கும் என்று கணித்தேன். ஆனா, படத்துல வார குடும்பங்கள் மட்டுமல்ல , ஊர் உலகத்துல உள்ள எல்லா குடும்பமுமே சம்பந்தப்பட்டிருக்குனு படம் interval க்கு முன்னாடியே நாம தெரிஞ்சுக்கிடலாம். ரொம்ப ஸ்லோ தான். ஆனாலும் ஒரு சீன் கூட மிஸ் பண்ண முடியல.  ஆடுகளத்துல அழகா அரவமே இல்லாம வந்துட்டு போன தப்ஸி பண்ணு , ஸாரி , பொண்ணு. Actually,

அட்டவணை - A Married Woman's Timetable - part-6

குளிச்சு முடிச்சு வாரதுக்குள்ள துவட்ட துண்டும், போட துணியும் ரெடியா எடுத்து வைச்சதுக்கெல்லாம், மனசு தவியா தவிக்கும் வெளிய வந்து துள்ளி குதிக்க ...... பூசை நேரம் தினமும் வந்தா, சட்டு புட்டுன்னு பூச போட்டு உங்க கையால ஒத்தும் சூடம் கேட்டு  என் கண்ண மூடி நிப்பேன் நம்ம பிள்ளைக் குட்டி வந்த பின்னும் துப்பித் துப்பி விளையாட்டா  போடும் ஆட்டமெல்லாம் அதுகளோட சேந்து நாம போட வேணும்.... நம்ம பிள்ள வந்த பின்ன கூட,  ஒரு கையில அவன் படுத்துறங்க , மறுகையில நான் படுத்துக் கொள்ள எப்பொழுதும் போல என்ன தட்டிக் கொடுக்கும் தூக்கம் வேணும்.... உங்க கிட்ட படுக்கதுக்கு  எங்க ரெண்டு பேருக்குள்ள அடிபுடி சண்ட  தினமும் வேணும். நம்ம ரெண்டாவது புள்ள வந்தப்புறம் கூட ,  ஆராய்ச்சி செஞ்சுனாலும் கிட்ட வந்து படுக்கதுக்கு ஒரு வழிய கண்டெடுப்பேன். நீங்க தனியா தூங்கும் போது  அரையடி தூரத்துல நின்னுகிட்டு உதட்ட குவிச்சு  இடையிலுள்ள காத்துக்கெல்லாம் அரை நிமிசத்துக்கும் மேல முத்தம் குடுத்துருக்கேன்

வந்தார்கள் வென்றார்கள் - A review on pages with blood shower and treasury loot

Image
2 லட்சம் பிரதி , 26 வது எடிஷன் - என்று வாசிக்க அழைக்கும்   அட்டைப்படம் , வந்தார்கள் வென்றார்கள் என்ற வசீகரிக்கும் தலைப்பு , உள்ளே வண்ண வண்ண படங்கள் , என்று அத்தனை அம்சங்கள் இருந்தாலும் , உடனே வாசிக்க தூண்டுற அளவுக்கு நான் புத்தகப் பிரியர் இல்ல. வருடங்கள்    முன்னாடி , அரை டசன் புக்ஸ ஒரே மாசத்துல முடிச்சதா நியாபகம். அந்த திடீர் ஆர்வம் எப்படி வந்தது ? பின்னர் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்குற அளவுக்கு ஒரேயடியான மறைவு ஏன் ? எதற்குமான காரணத்தையும் ஆராய விரும்புனது இல்லை.   இந்த லாக்டவுன்ல நேரம் போகாதத மறைக்க "நானும் தான் வாசிப்பேன்னு" ஒரு நல்ல புக்க தேடி புறப்பட்டேன். சரி நம்ம நாட்டோட பின்புலம் பத்தி , அங்க அங்க கேள்விபட்டிருப்போம். ஆனா , முழு வரலாறை இத வாசிச்சா   ஓரளவுக்கு தெரிஞ்சிக்கலாம ் என்ற ஆர்வம் தான் வாசிக்க வச்சுது. இருந்தாலும் ஒரு எரிச்சலோட தான் வாசிக்க ஆரம்பிச்சேன். காரணம் புத்தகத்தோட தலைப்பு. “வந்தார்கள் வென்றார்கள்”. எவன் ஊர்ல வந்து எவன் வெல்லுறதுங்குற அந்த சின்ன எரிச்சல்.   கடைசி பத்தி தந்த சின்ன ஆறுதல் தவிர ,   புத்தகத்த   முழுசா   வாசிச்சு முடிச்சப்புற

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

Image
பரீட்சை பேப்பர் முதல் திருமண பத்திரிக்கைகள் வரை, ‘உ’ னா என்ற பிள்ளையார் சுழியுடன் தான் இந்துக்கள் ஆரம்பிக்கின்றனர். பெரும்பாலான சமய இடங்களில் முதல் மறியாதை கிடைக்கப்பெற்று அமர்ந்திருக்கும் இவரை கணபதி, விநாயகர், யானைமுகத்தோன், பிள்ளையார், கஜமுகன், விக்னேஸ்வரன் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். இவரின் பிறப்பு பற்றி பல கதைகள் இருந்தாலும், கலியுகத்தில் கூறப்படும் கதையை சுருக்கமாக பார்க்கலாம். பின்னர் அவரின் தோற்றம், மக்களிடத்தில் பிரபலமான கதை மற்றும் இவரின் பின்னால் இருக்கும் அரசியலையும் பார்க்கலாம். திருச்செங்காட்டங்குடியில் இருக்கும் வாதாபி விநாயகர்

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?

Image
உலகின் பெருவாரியான மக்களால் பின்பற்றப்படும் மதம் கிறிஸ்தவம். அதன் புனித நூலாக இருப்பது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு . இந்த மதத்தின் மையப் புள்ளியாக பார்க்கப்படுவது இயேசுவின் அற்புதங்களும், உயிர்த்தெழுதலும். நம்முடைய பாவத்தை கழுவ ஏசு சிலுவையில் அறையப்பட்டு, பல துன்பங்களை அனுபவித்து, பின்னர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று  இருபது நூற்றாண்டுகளாக மக்களால் நம்பப்படுகிறது. அதுவே ஈஸ்டர் என்னும் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

கணக்கு தவறானால் கம்பி எண்ணுறது நிச்சயம் - Wrongly jailed for false probabilistic assumption

Image
வீட் டு ல கணக்கு தப்பா போட்டா அம்மா அடிப்பாங்க , பள்ளிக்கூடத்துல கணக்கு தப்பா போட்டா டீச்சர் அடிப்பாங்க , அதேது கோர்ட்ல ( நீதிமன்றம் ),  நீதிபதி   கணக்கு தப்பா போட்டா ( எ.கா. நீதியரசர் குமாரசாமியின் கணக்கு ) ??? குற்றவாளி தப்பித்தும் போகலாம், நிரபராதி ஜெயி லுக்கும் போகலாம்.