என்னமோ இருக்கு உனக்குள்ள!!!

எந்த சிரமும் இல்லாம ....... அலாரம் வைக்காமையே...... அதிகாலை ஒன்பது பத்து மணிக்கு எந்திச்சு,  பல்ல மெதுவா, அப்படியும் இப்படியுமா தேச்சுட்டு இருக்கும் போதே, " காலைலேயே நான்  வந்தாச்சு"ன்ற  தகவல் உன் வார்த்தையால  இல்லாம, உன் வாசனையாலயே  வாசல் வரை இழுக்கும்.  ஒருவேளை  உனக்காக தான் என் பகல் எல்லாம்  விடியுதோனு, பகல் கனவு கண்டே, பல நாள் போயிருக்கு. அந்த ஒரு நேர உன்னோட வரவுக்காக, யுகம் முழுதும் இந்த வீட்டுலையே இருந்திடலாம்னு தோணும். இருந்தாலும்  எதையும் வெளிய  காமிச்சுக்காம, பல்லுனு ஒன்ன  தேச்சுட்டா , அடுத்து   பேப்பர் வாசிப்பதே பேரானந்தம்னு, அதுல மூழ்க முனைந்தாலும், உன்ன பாக்குற அந்த இடைப்பட்ட ரெண்டு நிமிஷத்துக்குள்ள, ஒத்த தலைவலியே வந்த மாதிரி, என்னவோ  பண்ணும். இது  எல்லாத்தையும் மனசுலையே மறச்சு வச்சிட்டு, சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, இப்படி நெறைய பட்டு, ரெண்டாவது பக்கம் திருப்பும் போது, எங்கம்மாக்கே உரிய எந்த ஆரவாரமுமில்லாத  நடையோட, இருந்தாலும்   நடைல இல்லாத அந்த ஆரவாரமெல்லாத்தையும்  வார்த்தையா கோர்த்து, உன்னையும் கூட்டிக்கிட்டே, என்கிட்ட  வந்து,
 "இந்தா புடி. ஒரு காபிக்கூட ஊத்தி குடிக்க முடியல. எல்லாம் நானே தரணும். இப்படியே இருந்தா  போற வீட்டுல, உன் மாமியாரா கைல கொன்னு வந்து தருவா "னு, பாடிக்கிட்டே  வந்து, (சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்னு, எங்கம்மாவோட செந்தமிழும் (திட்டுகள்) எனக்கு பழக்கமாகிப்போச்சு. அதனால, நீங்க எனக்காக பெருசா வருத்தப்பட்டு, உங்கள நீங்களே   வருத்திக்காதீங்க.............) தரும்போது, நைஸா என் விரல் உன்மேல உரசும். 

உன் சூடு, என் கைல பரவிட்டு இருக்கும்..........போதே,
மெதுவா, பக்கத்துல கொண்டு  வந்து,
அப்படியே,  ராவா ஒரு சிப் அடிச்சோம்ன்னு வச்சிக்கோங்களேன்,
.......நிச்சயமா சொல்றேன், "  என்னமோ இருக்கு உனக்குள்ள ". ப்ரூ, சன்ரைஸ்னு யாராலயும் உங்கிட்ட நெருங்க முடியுதா???  "என்னமோ இருக்கு உனக்குள்ள"

ஹ்ஹ்ஹ்ஹ்ஹா...........................த்தூ......................னு துப்ப நினைக்கவங்க கொஞ்சம் தள்ளி பொய் துப்புங்க. காபில பட்டுற போது.
 என்னதான் போத்திஸ்னு பிராண்டட் கண்ணாடி கடைக்குள்ள வச்சு  ப்ரெஷ்ஷா திரிச்சு தர்றதா, லியோ காபிக்காரன்  நம்மகிட்ட  திரிய  திரிச்சாலும், சூர்யாவ வச்சே,  இன்ஸ்டன்ட் சூரியனயே  சுழல விட்டு, நொடியில் ரெடினு கா(ம்)பியரிங் பண்ணாலும், பக்கத்துல ஓடுற கடுங்காபிக் கலர் கால்வாய்ல இருந்து வர்ற கப்பகூட கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு, காத்தோட கலந்து, மூக்க பொத்த கர்ச்சீப்புக்கோ, கைக்கோ  வேலை கொடுக்காத உன் கால்தூசி பெறுமா???

courtesy: பேஷ், பேஷ்...... ரொம்ப நன்னா இருக்கே, narasus coffee. 

ரெசிபி:

கரெக்டா, ஒரு வாரத்துக்கு அப்பப்ப திரிக்குற, சிக்கரி கலக்காத கால் கிலோ நரசுஸ் காபித்தூள்ன்ற,  கணக்கு மாதிரி, கொதிக்கவைக்குற  வைக்குற அளவுல, ஒரு டம்ளர் தண்ணிக்கு, ரெண்டோ, மூணோ, முழு ஸ்பூன் தூள்ன்ற கோட்பாடும், இப்போ நம்மளோட இந்த ரெசிபிக்கு ரொம்ப முக்கியம். கொதிக்க விடும் போதே, சிம்மு, மேக்சு, மேக்சு, சிம்முனு , அடுப்ப மாத்தி மாத்தி எரிய விட்டுட்ட்ட்ட்........டு இருக்கும் போதே, மனசுல, ஆ........... அடுப்ப இப்போ அணைக்கலாம்னு, ஒரு இடத்துல, sjsurya மாதிரி ஸ்பார்க் அடிக்கும். அந்த இடத்துல அணைச்சிட்டு, அந்த பாத்திரத்துல அப்படியே தூள தெளிய விட்டு இல்ல, விடக்கூடாது. அங்க தான் தப்பு .பண்றீங்க.  அடில உள்ள தூள் எல்லாம், ஒரே  ஆத்துல, அள்ளி அணைச்சு வார மாதிரி, ஒரு டீக்கடைக்காரர் ஆத்து ஆத்தி, டிகாஷன் சேர்த்த பாத்திரத்துல இருந்து இன்னொரு பாத்திரத்துக்கு ஊத்தி தூள் தெளிய விடனும். எல்லாம் செஞ்சு இந்த பாயிண்ட்ட  மிஸ் பண்ணிட்டீங்கன்னா, அப்புறம் குடிக்கும்போது, அவ்ளோ ஒன்னும் சொல்லிக்குறாப்புல  நல்லா இல்லையேனு வாய உதப்பி ஒவ்வொருத்தர் மூஞ்சியா பாக்க வேண்டியதா போய்டும், ஆமா, பாத்துக்கோங்க.
நிதானமா, பத்து நிமிஷத்துல, வேற வேலைகள்  இருந்தா, அத அரக்க பரக்க முடிச்சிட்டு வந்து எட்டி பாத்தா, செடிமெண்டேசன் ப்ரோசெஸ் , the tendency for particles in suspension to settle out of the fluid in which they are entrained, and come to rest against a barrier, ஆகிப்போய் , தூள் எல்லாம் கீழ செட்டில் ஆகி, டிகாஷன் மேல ரெடியா நம்மளுக்காக டார்க் பிரவுன் கலர்ல உக்காந்திட்டு இல்ல, ...............படுத்திட்டு, வேணாம்  நின்னுட்டு, கழுதை  எந்த ஆங்கிள்ல பாத்தாலும், ஒரே மாதிரி இருக்க அதுக்கு, இத்தனை ட்டா. ஆக,
 டார்க் ப்ரவுன் கலர் டிகாஷன் ரெடி.

இப்படியாக கிடைக்கப்பட்ட டிகாஷன,  தெளிய ஊத்தி,  இரண்டே  ஆத்துல ஜீனி(சீனி தான் இங்க  மருவி இருக்கு, என் பாஷைல) கரையுற அளவுக்கு, சுடச்சுட இருக்க பால்ல, கலந்து  குடிச்சோம்னா,
நீங்களும் சொல்வீங்க
"அட,  ஆமா,......... என்னமோ இருக்கு உனக்குள்ள ".

இருந்தாலும்........ ஆனாலும் ...........நீங்க என்னதான் நான் சொன்னதுக்கெல்லாம் ஆமா  போட்டாலும்......... அடுப்ப பத்த வச்சு ஆத்தி ஆத்தி பாத்தாலும், அடிச்சு சொல்லுவேன், எங்கம்மா போட்டு தர்ற காபிக்கு ஈடு இணை எதுவுமில்லைங்க. சும்மா சொல்லல. காலம் காலமா, களம் களமா, காபி குடிச்ச கணக்கெடுப்ப வச்சிட்டு  சொல்றேன். இவ்வளவு ஏன், இதுக்கிடைல, எங்கம்மாக்கேகேகேகேகே, இவ்வளவு பக்குவத்தையும் சொல்லி கொடுத்த எனக்கேகேகேகேகேகே, நான் போட்ட காப்பிய குடிச்சா கழனித்தண்ணிய குடிச்ச மாதிரிதான் இருக்கும்னா பாத்துக்கோங்க, அப்போ, உங்க காபி நிலமைய அடே, டகால்டி மண்டையி(--->நான் என்ன சொன்னேன்), எந்த கேஸா இருந்தாலும் முன் ஜாமீன் வாங்கி வச்சுக்குறது நல்லது)

Comments

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

Sapiens: A Brief History of Humankind

The Art of War

The Sixth Extinction: An Unnatural History

schindler's list

நைட்