திருநெல்வேலி டூ கடையநல்லூர்

சில பேர் இருக்காங்க. நேத்துதான் நியுஜெர்சி போய் நெய்யுருண்ட வாங்கிட்டு வந்தேன். போன  பங்குனிக்கு,  பணாமால பால்கோவா சாப்பிட்டுட்டு இருந்தேன்னு சப்ப மேட்டர்க்கு  எல்லாம் சவுண்ட் விட்டுகிட்டு. ஆனா, எப்படிதான் இப்படி தன்ன பத்தி தானே தம்பட்டம் அடிச்சுக்குறாங்களோ??? தெரியலப்பா.
 அதுல பாருங்க, இந்த மாதிரி ஆட்களுக்கு நடுவ ஒரு நாள் ஒரு விடிவெள்ளிய, ஒரு  செந்தாமரைய சந்திச்சேன். ஒரு அகில  உலக மாதிரி பயணமே போய்ட்டு வந்தும்,  அனக்கமே இல்லாம  அமர்ந்துட்டு இருந்தத பாக்கும் போது புழு அரிச்சிட்டு. இப்படியே போனா, ஒருநாள் அத்திப்பட்டின்ற பேரே அகராதில இருந்து அழிஞ்சிடும்னு ஊர் மக்கள் எல்லாரையும் அவரே நச்சரிச்சு வேண்டுகிட்டதால,  அந்த செந்தாமரை, அதே விடிவெள்ளியான, நம்ம மருதாணி, தன்னோட அந்த உள்ளூர் பயண வரலாற்ற உங்கள் முன்னால் சொல்ல விளைகிறார்.

திருநெல்வேலி தெரியும், அது என்ன கடையநல்லூர்? அது எங்க இருக்குனு பல பேர் அவங்களுக்குள்ளயே   கேட்டுட்டு இருக்கும்போது,
 யே............நம்..............நம்ம சிக்குன்குனியா ஊருலா? அத எப்படி மறக்க முடியும்னு அடுத்த நிமிஷமே, உங்க முடிக்குள்ள இருக்க தலைக்குள்ள  இருக்க மூளைக்குள்ள பொறி தட்டிருக்கனும்.

தட்டாதவங்களுக்கும், இந்தா............ அடுத்த பத்தில தட்டிரும் பாருங்களேன்.

திருநெல்வேலிக்கு எப்படி தாமிரபரணி யோ, அப்படி ஒரு பிணைப்பு நம்ம கடயநல்லோருக்கும் சாக்கடைகளுக்கும்.
 அதுலயே, kinder joy மிட்டாய்  கூட ஒட்டியே வர்ற பொம்மை மாதிரி, சாக்கடைகளுக்கும்,  கூடவே  திரியுற பன்னி கூட்டங்களுக்கும் அப்படி ஒரு இணைப்பு.
ஒருவேளை சாக்கடைகள்ல உலவுற  புழுக்கலெல்லாம் தான் ஒண்ணா சேர்ந்து சேர்ந்து, பன்னியா பிறப்பெடுக்குதோனு doubt வர்ற அளவுக்கு ரெண்டும் அவ்ளோ ஒட்டினா பாத்துக்கோங்களேன் .(kinder joy எ போய் பன்னி  கூட compare பண்ணி, இனிமேல் kinder joy அ பாத்தாலே இந்த பன்னிங்க  ஞாபகம்ந்தானே வரும்னு, வறுத்தப்பட்டு, வாந்தி எடுத்தா, அதுக்கு  நான் பொறுப்பில்லை)

இப்படி சாக்கடைகளோட தலைக்-காவிரியாகிப்போன  கடையநல்லூர் தான், 5,6 வருஷம் முன்னாடி, அனேகமான எல்லோர் வீட்டுக்கும் வந்துட்டு, 6 months மூட்டு வலி ய free ya கொடுத்துட்டு போன, நம்ம சின்னம்மா சிக்குன்குநியாவோட சொந்த ஊர்.

இப்போ என்னன்னா, இதுக்கும் நான் இன்னைக்கு சொல்லப்போற கதைக்கும் சம்பந்தம் இல்லதான் . இருந்தாலும், இன்னைக்கு நான் இத சொல்லலன்னா, இப்படி இந்த சிக்குன்குநியாவோட வரலாறு அழிஞ்சே போய்ட்டே னு, பின்னாடி ஒருநாள் யாரும் வருத்தப்பட்டுரக்கூடாது பாருங்க. என்ன இருந்தாலும் வரலாறு தான்க  எனக்கு   ரொம்ப முக்கியம.

இப்பேற்பட்ட, கடையனல்லூர்க்கு பக்கத்து ஊர்ல இருக்க, க்ரிஷ்ணபுரத்துல இருக்குற, பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்க்கு போயிட்டு வரலாம்னு புறப்பட்டு, வீட்டு வாசல்ல வந்து பாத்தா, car driver இன்னைக்கு leave னு எங்கப்பா, carஅ on பண்ணி ac போட்டு வச்சு, driver seatக்கு பக்கத்து seatல உக்காந்திருந்தாங்க. oooohhoooooo, அப்படினா என்ன அர்த்தம்னு உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லல. அப்படின்னா, அன்னைக்கு
 driver நானே தான். எஸ் யா, its me யா. இப்போ புரியுதா,ஏன் இந்த oooooohhhhoooooooo.

அவ்வளவு தூரம், என்கப்பாகூட அதுதான் first ttime. வண்டி ஓட்ட ரொம்ப பிடிச்சாலும், அப்பப்போ எங்கேயாவது சின்னதா மோதி, கண்டவன்ட்ட எல்லாம் திட்டு வாங்கி, அசிங்கப்பட்டு(adha ninaikkum bodhu manasuகு  kashtamaa dhanக  irukku. irundhaalum, idhellam oru asingamaa, college,school la namma vaangaadha thitaa, padaadha asingamaa nu naane marupadiyum manasa thethikuven). கொஞ்ச நாளா, carஅ  எடுக்காமையே  இருந்தேன்.

இன்னைக்கு, அசிங்கப்பட்ட இடத்து வழியா, எங்கப்பா koodave போறேன்னதும்,
' ம்ன்னு '  , கொஞ்சம் கர்வம் steeringல வந்து எனக்கு முன்னாடியே உக்காந்திட்டு இருந்துது. " அப்பாலே போ சாத்தானேனு " வச்சிட்டு அத  தூக்கி, brrm..brrrrmmmmmmனு ...........start பண்ணி .................நில்லுங்க.  இதென்ன bikeஆ.  carஉ மக்களே carஉ. 
 brrrrm...... brrrmmmm.............இல்ல..........கிச்சு..கிச்சு..கிச்சு..............கிச்சு..கிச்சு...கிச்சிச்சு. இது என்னன்னு தெரிலையலைல. டட்டடைங்க், car start ஆகிட்டுனு அர்த்தம். பயப்படாம  ஏறிக்கோங்க. ஒரு ரவுண்டு போய்ட்டு வந்துடலாம்.


என்னதான் கர்வம், ஸ்டீரிங்னு ஆயிரம் படம் போட்டாலும், அசிங்கப்பட்ட இடத்த கடந்து போகும் போது, அந்த பக்கம், இந்த பக்கம் திரும்பி பாக்கவே இல்லையே.  நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வைனு  அசிங்கப்பட்ட சுவடு, என்ன அலுங்காம குலுங்காம கூட்டிட்டு போய்ட்டு. இப்பவும் அது உருத்துதுன்னா, கொஞ்சம் ரொம்ப தான் அசிங்கப்பட்டுடேன் போலனு  எனக்கே இப்பதான்  தெரியுது.


போகும் போது, first starting ல, மெல்ல மெல்ல 2nd, 3rd, topஉனு உருட்டி, 5th la ஓட்ட ஆரம்பிச்சு. அப்புறம் ஒரே 5th தான். இறங்கவே இல்லையே. எங்கப்பாவா speed breaker வருது, 2nd போடு, 3rd போடுன்னு சொன்னாதான், ஓ, அப்படியா, சொல்லவே இல்லனு 1 நிமிஷம் அதிர்ச்சி ஆகி ஆச்சர்யப்பட்டாலும், டக்குன்னு alert ஆகி, speed breakerஆ, எங்கநு கேக்குற அளவுக்கு, smoothஆ கொண்டு போய் விடுவேன் பாருங்க....................... அங்க நிக்கேன் நான். (hey, its true pa. really. venumnaa engamma ta, vendaam vendaam, engamma naan vachaa puli kulamba, puli thanningum, kootaanjor a sambar sadhamngum. neenga, pesaama engappa ta ye ketu paarungalen)


போகும் போது பெருசா ஒன்னும் சுவாரஸ்யம் இல்லன்னாலும், போற வழி short ஆ அத்தியுத்து, சுரண்டைனு, கிராமப்பகுதினால, 2- way road லையே, சின்ன 2- way road. quite challenging. அதுலயும், ஒன்லி  5th gear. நானா போடுதேன். தானா போடுது,  என் கை. அவ்ளோ எக்ஷ்பெர்ட் ஆகிட்டோம்ல நாங்க(கடவுளே, கௌமாரி, கொஞ்சம் ஆணவத்துல பேசிட்டேன்னு, அடுத்த தடவ கணக்கு வச்சு கவுத்திடாதம்மா. நான் உன் பிள்ளம்மா. உன் பிள்ள)


இடைல, ஆலங்குளம் வந்துதுல்ல. அப்பவே சொல்லணும்னு நினைச்சேன். மறந்து வண்டி ஆய்க்குடி வர வந்துட்டே.
யிருந்தாலும் என்ன , அதான் இப்ப ஞாபகம் வந்துட்டே. வாயாலயே  ஆலங்குளம் வரை போய்ட்டு வருவோம் வாங்க.
அதாவது என்னன்னா, அனேகமா அடுத்த 2 வருஷத்துல, நம்ம  திலி-தென்காசி வழி, தங்க நாற்கர சாலைல  ஜொலிக்க போகுதுன்னு நினைக்கேன்.
இப்போதான் ஆலங்குளம் மக்கள் எல்லோரும் எந்த  roadஆ இருந்தாலும், ஊருக்குள்ள தான்  வரணும், அப்போதான் எங்க வாழ்வாதாரம் பாதிக்காதுனு  மனு கொடுத்துட்டு போய்ருக்காங்க. ஹி..ஹி ... என்கிட்டே இல்ல. collectorகிட்ட.
அவங்க கேக்கதும் நியாயமா இருந்தாலும், அந்த 30அடி ரோட்ட ஊருக்குள்ள போட்டா, 10, 300 கடை அடிப்பட்டு போகுமே அப்படிங்கறது என்ன மாதிரி, வெட்டி வாய் பேசுவோர் சங்கத்தோட உறுப்பினர்கள் சில பேரோட வளைகாப்பு. sorry, அங்கலாய்ப்பு. கல்யாணம்நு ஒன்னு நடந்தா, அதுல இந்த மாதிரி 4 பேரால கலவரம் வர தான் செய்யும்ங்கறதால, நீங்க பெரியவங்களா பார்த்து  யாருக்கு கழுத்த நீட்ட சொல்றீங்களோ, ஐயோ, அது என் குடும்ப diaogue ஓ. பெரியவங்க எல்லோரும் சேர்ந்து சட்டு புட்டுன்னு சீக்கிரம் roadஅ  கொண்டு வருவீர்களாகன்னு முடிசசிக்குறேன்.

tea, bun ஏதாவது சாப்ட்டு வாங்களேன். பேசுவோம்.

கொஞ்சம் ரொம்ப நீளமா போனதுல, திலி டூ  கலூ part-2 release பண்ணிங்.











Comments

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?