அம்மாவின் முத்தம் அறுவகைப்படும்


பிறந்தவுடன் 

 நீ  பதித்த  முத்தம்,
நினைவில் இல்லை.
 


நினைவு தெரிந்ததும்,
  நீ கொடுத்த முத்தம்
அந்த வயதில் புரியவில்லை. 



விளையாடி விட்டு  வந்த, வியர்வையை ,
 துடைத்து  விட்டு  நீ  தந்த  முத்தம்,
எச்சிலாய்    துடைக்கப்பட்டது  மீண்டும் .


மேல்உதட்டு  ரோமங்கள் ,
 இன்னும்  துளிராத  விரக்தியில்,
உன் முத்த சுகம் ஒன்றும் பெரிதாய்  விளங்கவில்லை.


என் முடி முளைத்த கண்ணம் ஒன்றும் ,
 உன்  உதட்டு  ரேகைப்  பதிவேட்டிர்க்காக
காத்திருக்கவில்லை.

இருந்தும்,

இருவருட தூர தேச பயணத்திற்கு பின் 

இன்று அவள் தந்த முத்தத்தில் உணர்கிறேன்
 

அவள் தந்த அனைத்து முத்தங்களின் அர்த்தத்தை.
 


மறுபடியும் பிறப்பெடுக்க காத்திருக்கிறேன் ...................

உன் முதல் முத்தம் முதல் அறிந்து கொள்ள................... அம்மா.



Comments

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

The Art of War

schindler's list

Sapiens: A Brief History of Humankind

The Sixth Extinction: An Unnatural History

நைட்