என்னை அறிந்தால்!!!

பல சில வருடங்களுக்குப பிறகு, சில பல  காரணங்களுக்காக, ஒருவித  தனிமை ல இருந்த எனக்கு, ஒருநாள் துணையா, என்னோட காலேஜ் டைரி  என் கைல கிடைச்சது. 

இவ்ளோ நாள் கழிச்சும்,
(காலேஜ் முடிச்சு கொஞ்சம் நிறைய நாள் தான் ஆகிட்டு னு சும்மா வச்சிகொங்களேன்), அவுகள  எடுத்து வாசிக்கப் போறதுக்கு முன்னாடி வர, ரொம்ப நாளா நான் தொலைச்சிருந்த என்னோட அந்த சிரிப்ப, அதே சிரிப்ப, திருப்பி கண்டுபுடிச்சு என்கிட்ட  தர போகுது னு எனக்கு தெரியல. 

அன்னைக்கு நான் சிரிச்ச சிரிப்புல தான்  ஒரு  உண்மையான சந்தோஷம் இருந்துது, சந்தோஷமான நிம்மதி இருந்துது, சொல்லபோனா ஒரு நிம்மதி தர்ற உண்மை இருந்துது. 

அந்த சந்தோஷத்த இவ்ளோ நாளா எங்க தான் தொலைச்சேன்னு தேடும் போது தான், நான் மேல கூறப்பட்டவைகள மட்டும் தொலைக்கல, என்னையே தொலைச்சிருக்கேன்னு தெரிஞ்சுது.

(என்னை னா,
என் குணம் = நல்லதங்காள் அடுத்தாப்புல நல்ல பிள்ள நான் தான்னு  எங்கம்மா என்ன அடிக்கடி சொல்லுவாங்கனு  சொல்ல ஆசை தான்.


என் மொழி = நண்பர்கள்ட்ட மட்டும் பேசுற அந்த பெயரில்லாத மொழி.  கண்டிப்பா எல்லோரும் பேசிருப்பீங்க.  ofcourse, தமிழ் தான். but, இது தமிழ் லயே கொஞ்சம் deep தமிழ். டேய் அந்த speaker மண்டையன் ரொம்ப தாளிச்சுட்டாண்டா, போடா டேய் டுபுக்கு, dashu
து, த்தூ, ஹா ...............த்த்தூ, என்று துப்புவதில் பல ரகங்கள். 

இது  போன்ற எந்த மொழி இலக்கணத்திலும் கண்டுபுடிக்க முடியாத  செப்பனிடப்பட்ட வார்த்தைகள் கொண்டது தான், நான் மேல் கூறிய நம் மொழி, நம் அங்கீகாரம் (sorry, prabhu voda kalyan jewelry vilambaram paathu paathu oru flow la vandhutu)

என் அறிவு = அறிவுன்னா உடனே மூளையும், மூளை சார்ந்த விஷயங்களும் னு நினைச்சிடாதீங்க. plan et of the esc ape,  enquiry  of the deal, pudungifying of the சாப்பாடு from the friend னு இப்படி பல அரிய வகை ஆராய்ச்சிகளுக்கு உபயோகப்படுத்துன, படுத்திட்டு இருக்குற என் அறிவு, உங்கள் அறிவு, நம் அறிவு.

என் கலை = ஓ, கலை எல்லாம் தெரியுமா!!! பரவாயில்லலலலலயேனு நீங்க நினைக்கதுக்கு முன்னாடி ஒரு small doubt. அதாவது என்னன்னா, dance ஆடுறவங்களுக்கு tea, bun வாங்கி கொடுக்குறது, அவங்க ஆட போற பாட்ட வெட்டி ஒன்னா சேக்குறது (நான் இல்லல, கடைல கொண்டு போய் கொடுத்தா கடைக்காரன் வெட்டுவான், but, நான் கூட நிப்பேன்). இதுவும் ஒருவித கலைதானே.

அதான், என்னை தேடும் முயற்சியில், உலக கூகுள் ல முதல் முறையா நான் நானாக " மருதாணி ".

பெயர்க்காரணம் நான்கு வரிகளுக்கு  மிக்கி  கூறுக: 

மருதாணிய கைல வச்ச, ஒரே ராத்திரில சிவப்பாகுற மாதிரி, நீங்க என்ன மருதாணினு கூப்ட்டு கூப்பிட்டு நானும் நிசமாவே ஒருநாள் சிவப்பாகிட்டேன்னா (சின்ன வயசுல மஞ்சத்துண்டா இருந்தேன்னு  எங்கத்தை அடிக்கடி சொல்லுவாங்க. அவங்க சொன்னப்ப பாத்ததோட
(கற்பனைல) சரி, நாட்டுக்கு ஒரு நல்லது செஞ்சோம் ற பெருமை உங்கள வந்து சேரும். பாத்து செய்யுங்க. 
பி.கு: இப்பவும் அதே மஞ்சதுண்டுதான். இருந்தாலும், ஒருநாள், இந்த  மருதாணி கலருக்கு வந்திடனும்ங்கறதான் என் லட்சியமே (வாழ்க்கைனா நிச்சயம் ஒரு லட்சியம் இருக்கனும் பாருங்க !!!)

Comments

பிரபலமான பதிவுகள்

அபுதாபி

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

ஐரிஷ் பஞ்சம்

Bengal Famine

The Diary of Anne Frank

The Art of War

schindler's list

Sapiens: A Brief History of Humankind

The Sixth Extinction: An Unnatural History

நைட்