திருநெல்வேலி டூ கடையநல்லூர்-2

எதுல முடிச்சேன்.

ஆங்.................... ஆலங்குளம். அது இன்றைய தகவல். நம்ம மெயின் மட்டேர்க்கு வருவோம்.

இப்படியாக, 1-2-3-4-5, 5-4-3-2-3, 3-4-5.....................................5-2 என்று கியர் கம்பி என் கைகளுக்குள் விளையாடிக்கிட்டு இருந்த  கேப்லையே, கோயில்க்கும் போய் சேர்ந்து, துளசி மாலை எல்லாம் வாங்கி, நடந்து போய்ட்டு இருக்கும்போதே, எதித்தாப்புல ஒரு ஐயர் வந்தாரு. அப்பவே நினைச்சேன். பக்கத்துல வந்த உடனே, grand ஆ confirm ஆகிட்டு. கோவில் நடை சாத்தியா............ச்ச்சு.

 பொதுவா, கோவில்க்குன்னு போய்ட்டு நடை சாத்தி இருந்தா, மனசு கஷ்டப்படுறது எல்லோருக்கும் சகஜம் தானே. ஆனா பாருங்க, அன்னைக்கு என்னவோ, ஹப்பா, நடை சாத்திருக்கு, வாங்களேன், சீக்கிரம் வண்டி ய எடுப்போம்னு, பின்னாடி இருந்து யாரோ கூப்பிட்ட மாதிரியே இருந்துது  .யாருன்னு பார்த்தா, என்  மனசு தாங்க. வண்டிய விட்டு வர மனசில்லாம,banot  மேல உக்காந்திட்டு இருந்துது.

அடுத்த தடவ, க்ளச்சே இல்லாம வண்டி ஒன்ன தயாரிக்கணும். அது இருக்க போய் தான, பிக்காளி ஆக்சிலரட்டர் ல இருந்து கால் எடுக்க வேண்டியிருக்கு என்று உதார் விடும் அளவுக்கு, திரும்பி வந்து வண்டி ஓட்டுறதுக்குள்ள தன்னம்பிக்கை கூடியிருந்துது.


வர்ற வழியெல்லாம், போன உடனே, முதல் வேலையா, நம்ம சிலுக்கு சிபாயாட்ட சொல்லணும்நு மனசெல்லாம் அடிச்சிகிட்டு. சொன்னாலும், அந்த சனியன் நம்பாதே. யாரு, நீ.............யு , car ஓட்டுன. ஏன் பிள்ள,  நானே இப்போ தான் scooty  பழகிட்டு இருக்கேன். என் ஸ்கூட்டிய முந்திட்டு நீ கார் ஒட்டுத. அத நான் நம்பனும். ஏன் ஜகன், கேட்டியா கதைய, நம்ம மருதாணி  இருக்காளே, மருதாணி, நேத்து ஒரு காமெடி பண்ணா  பாரு.........................................
நம்ம கவுந்து கவுந்து கார்  ஓட்டுனாலும், அவ கண்ணுக்கு நேரா ஓட்டி காமிக்கதுக்கு முன்னாடி, மூச்சு விட்டா, முன்னூர் பேர்கிட்ட அசிங்கப்படுத்திடுமே னு, அவளுக்கு போன் பண்ணுறத கூட நினைக்காம அமைதியா இருந்துகிட்டேன்னு வச்சிக்கோங்களேன்.

 
ச்சே, phone அ  கையோட கொண்டு வராம வந்துட்டோமேன்னு, அன்னைக்கு தாங்க, அவ்ளோ வருத்தப்பட்டிருக்கேன்.

இடைல, கிடைல இந்த dbmsஓ(avalukaana indha punaipeyarukaana kaaranam, namma-pilla, pesunaa-aruvaa, paatha- kathi, vaaya thirandhaale blade dhanga. adhaan, irukadhulaye blade subject aana, enga dbmsndra subject peraye avalukkum vachitom.aanaa, mathapadi paasathulayo,help panradhulayo avala adichikka aale illa..lifetime  guarantee tharlaam.( adhuverai, pinnadi orunaal vaasika nerndhaa, edhulayum naanga konjam alert u).

wrong no(phone ku wrong no vandhu friend aana friend illainga. unmailaye, en friend pere wrong no dhan)ஓ, போன் பண்ண, பாட்டுக்கு இடைல disturbanceஆ இருக்கேனு எங்கப்பா எடுக்க, அவ வண்டி ஓட்டிட்டு இருக்காம்மா, பிறகு பேசுறியா நு எங்கப்பா கேக்க, வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துலையே, மறுபடியும் நானே  போன் பண்ணி,  என்ன பிள்ள, போன் பண்ணியா, வண்டி ஓட்டிட்டு இருந்தேன்னு ஆரம்பிச்சு, ஆமா பில, உங்கப்பா சொன்னாங்க, என்ன வண்டி, two wheeler ஆ. இல்ல பிள்ள,carனு அடக்கமா சொல்லுற மாதிரி acting விட்டு, நம்ம 1-2-3--4-5, 5-4-3-2-1 கதைய ஆரம்பிச்சா,  ஐ...................யோ..................நினைச்சாலே குஜாலசா இருக்கே.

ச்சே, phone அ  கையோட கொண்டு வராம வந்துட்டோமேன்னு, அன்னைக்கு தாங்க, அவ்ளோ வருத்தப்பட்டிருக்கேன்


நம்ம நேரம், நம்ம நேரம்னு சொல்லுவாங்களே. அந்த நம்ம நேரம், வண்டி  ஏதோ என் கிருபையால, ச்சும்மா பஞ்சா பறக்கேன்ற ...........சந்தோஷத்துகிடைல ,  speedometer முள்ளு  முட்டைலையே நின்னத  பாத்து கடுங் கடுப்பாயிட்டேன்லா. இந்நேரம், இந்த முள்ளு மட்டும் மூவிங்ல இருந்திருந்தா...............,
அத யேன் கேக்க, பேட்டை தாண்டும் போதே, 90, அப்புறம் மாறாந்தை கிட்ட ஒரு 100, 110,
 சுரண்டை, ஆய்க்குடி ஊருக்குள்ளயே  அந்த வேகம், அப்போ பை -பாஸ் ல நீயே கணக்குபண்ணிக்கோயேன்னு  தீஞ்சு போற அளவுக்கு கூட கொஞ்ச நேரம் கடல போட்ருக்கலாம்(எங்க ஊர்லலாம்  பொண்ணுங்க பொண்ணுங்க கிட்ட பேசுறதைதான் கடலனு சொல்லுவோம்.  நீங்க வேற தப்பா கிப்பா நினைச்சு எங்கப்பாட்ட வந்து போட்டு குடுத்துறாதீங்க)


இதுல பாருங்க. ஒரு ஊர்ல ஒரு சின்ன புள்ள. அந்த சின்ன புள்ள வண்டிய போகும் போதெல்லாம்,  முன் கண்ணாடிய  அடிக்கடி பாத்து பாத்து,, அது ஏனோ, என்ன காரணத்தாலோ, நம்ம   பின்னாடி மட்டும் ஒரு வண்டியும் வர மாட்டீங்குதே. வர்ற அண்டா சைஸ் வண்டிக்காரனும், இப்படி கொஞ்சங்கூட  வெக்கமே இல்லாம , முந்தி, முந்தி  போய்டுறானுகளேனு ரொம்ப வருத்தப்பட்டுட்டு  இருந்துச்சு ......................  இவனுகெல்லாம் நல்லா இருப்பானுகளா, போய் பெரிய ட்ராபிக் ல உன் வண்டி நிக்க.......னு சின்னதா   சாபம் விட்டுட்டு இருந்த அந்த  சின்ன பிள்ள,
 வரும்போது,................... பாத்தீதீ...............ங்கன்னா, ச்சும்மா த்தீயா..........
முந்தி, முந்தி..............முந்தி, முந்தி,................ முந்தி,முந்தி...............முந்தி, முந்தி.................அப்படிக்கா முந்தி, ஏ  இப்படிக்கா முந்தினு எல்லா வண்டியையும்(god promise),  ஒரே முந்தியா போச்சு போங்க(இந்த இடத்துல, வித் யுவர் பெர்மிச்சன், நான்  கொஞ்சம் வெட்கப்பட்டுக்குறேன். ஏன்னா,.......................... அந்த சின்ன புள்ளயே   நாந்தான).
ஆமா, அத ஏன் கேக்கீங்க. இவ்ளோ நாளா , கரெக்டா அப்போதான் ஜாதகம் எல்லாம் பார்த்து, அப்பா அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்கி, முன்னாடி போற வண்டிய இந்த தடவ கண்டிப்பா முந்திடனும்னு  ரெடி ஆகிட்டிருப்பேன். அதுக்குள்ள  சைடு வாக்குல,  வண்டியோட நீளம் ஒரு நிமிஷம் கண்ணு முன்னாடி மிரட்டுன மிரட்டுல,  கை தானா ஒரு கியர குறைச்சதுக்கூட தெரியாம, ச்சே, என்னதான் சீட்ல ஒட்டிற்றுந்த முதுகே முக்கா இன்ச் முன்னாடி வார அளவுக்கு, இழுத்து ஆக்சிலரேட்டர்   கொடுத்தும், முந்த முடியாம போச்சேனு வருத்தப்பட்டுக்கிட்டு இருந்தேன். அப்புறம், பொதுக்குழு கூட்டம் போட்டு நிறைய ஆலோசனை பண்ணி,  சைடு வாக்குல மட்டும் இல்ல , இனி, ப்ரொண்ட் வாக்குல, பாக் வாக்குல, டாப் வாக்குலனு   எந்த ஐ(eye)  வாக்கிங்கும் போகக்கூடாதுன்னு முடிவெடுக்கப்பட்டதுல தான், மேல சொன்ன  நம்ம முந்தி, முந்தி............. ............முந்தி, முந்தி.


இந்த ஊருக்கெல்லாம் இடைல, ஆய்க்குடி ல ஒரு ஐயப்பன் கோயில் இருக்கு. ரொம்ப அழகா பதினெட்டு படி வச்சு கட்டிருக்காங்க.... ன்னு எங்கப்பா சொன்னப்புறம் தான், ஆமா, 18 படி வச்சு கட்டிருக்காங்களேனு ஆச்சர்யப்பட்டுட்டே(நம்ம தான் எதையுமே அவ்ளோ கூர்ந்து கவனிக்குறதில்லையே), உள்ளே போனா தெய்வ தரிசனம்ங்க. அட, உள்ள இருக்கது தெய்வம் தானன்னு, நீங்க சொல்றது விழுதுன்னாலும், சில விஷயங்கள நான் ஒரு உள்ள உவகைல சொல்லும் போது அனுபவிக்கனும், ஆராயக்கூடாது. உண்மைலேயே அதியற்புதம் அங்க உள்ள வழிபாடு முறை தான். என்றும் இளமை, எதிலும் குளுமைனு இருக்க ஆசைப்படுற வயசுக்கு  மத்தில, நம்மளுக்கெல்லம் என்னைக்கு 50 வயசாகி, அந்த ஐயப்பன போய் பாத்துட்டு வர என்று டிவியில் வெறித்துப பார்த்த வெகுசில நாட்களும் உண்டு. பொம்பள பிள்ளைங்கள உள்ள விடுறது மட்டும்  இல்லாம, மூலஸ்தானம் வரைக்கும் போய் நம்மளே நம்ம கையால ஆரத்தியும், பத்தியும் காட்டி, பூஜை பண்ணலாம்ன்ற சுதந்திர தரிசன முறைய கடைப்பிடிக்கிறாங்க. அந்த ஐயப்பன பாக்க பாக்க, கண்ணுல பக்கத்துக்கு ஊர் குற்றாலமே  வந்துட்டு. ஐயப்பன்   பக்கத்துலையே, ரொம்ப பக்கத்துல, அவரு அங்கனா , நான் இங்க, இருபது நிமிஷம் உக்காந்து எந்திச்சிட்டு வந்ததுல , என்னோட ஆசை எல்லாம் தீர்ந்து போனதுல, ஒரு மட்டற்ற மகிழ்ச்சி தான்.


அத்தோட, வண்டி சிட்டா பறந்து சில்லுன்னு வந்து திருநெல்வேலில நிக்கும்போது மணி 11(ஸ்பீடா தான் வந்த மாதிரி தான் இருந்துது) ஆமா, வண்டி, வண்டின்னீங்களே, என்ன வண்டினு உங்களுக்குள்ள ஒரு கேள்வி எழுந்திருக்கனுமே.
அது என்ன வண்டின்னா,
 நம்ம சிம்ப்ளிசிட்டி சிங்கம், சீறிப்பாயும் சிறுத்தை, புல்லெட் புலி, பெருந்தலைகளின் பெருச்சாளி(vaaganam),  இந்தியாவின் இதயம், சமீப காலத்துல மூடு விழா கண்ட, அம்ம   அம்பாசிடர் காரே தான். ஏன் மூடுனாங்கலோ, என்ன சேதமோ, சேதாரமோ. ஆயிரம் சொல்லுங்க, அம்பாஸிடர் அம்பாசிடர் தான். வண்டி சும்மா ஜிவ்வுன்னு பறந்துது பாருங்க...............................ஐயைய்யோ...............மறுபடியுமா ..................என்ன இதுக்கே அசதி  ஆகிட்டீங்க. 2 நாள்ல சிட்டா..................ஒரு ச்விச்சர்லாந்து ட்ரிப் போடலாம்னு இருக்கேன்ன்ன்ன்ன். ofcourse, carல தான்.

Comments

பிரபலமான பதிவுகள்

வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க............... தென் கொரிய பயண டைரி

அபுதாபி

நைட்

ஐரிஷ் பஞ்சம்

லாக்டவுன் குமுறல்கள்

அண்ணே!!! கைமாத்தா ஒரு பத்தாயிரம் கிடைக்குமா!!!

விஜய் சேதுபதியாக ஒரு நாள் - The power of Artificial Intelligence

Sapiens: A Brief History of Humankind

இந்துக்களின் முதற்கடவுள் பிள்ளை-யார்?: Truth behind the belly baby

இயேசு உண்மையில் உயிர்தெழுந்தாரா? Did Jesus really resurrect?