Posts

Showing posts from 2014

என்னமோ இருக்கு உனக்குள்ள!!!

எந்த சிரமும் இல்லாம ....... அலாரம் வைக்காமையே...... அதிகாலை ஒன்பது பத்து மணிக்கு எந்திச்சு,  பல்ல மெதுவா, அப்படியும் இப்படியுமா தேச்சுட்டு இருக்கும் போதே, " காலைலேயே நான்  வந்தாச்சு"ன்ற  தகவல் உன் வார்த்தையால  இல்லாம, உன் வாசனையாலயே  வாசல் வரை இழுக்கும்.  ஒருவேளை  உனக்காக தான் என் பகல் எல்லாம்  விடியுதோனு, பகல் கனவு கண்டே, பல நாள் போயிருக்கு. அந்த ஒரு நேர உன்னோட வரவுக்காக, யுகம் முழுதும் இந்த வீட்டுலையே இருந்திடலாம்னு தோணும். இருந்தாலும்  எதையும் வெளிய  காமிச்சுக்காம, பல்லுனு ஒன்ன  தேச்சுட்டா  , அடுத்து   பேப்பர் வாசிப்பதே பேரானந்தம்னு, அதுல மூழ்க முனைந்தாலும், உன்ன பாக்குற அந்த இடைப்பட்ட ரெண்டு நிமிஷத்துக்குள்ள, ஒத்த தலைவலியே வந்த மாதிரி, என்னவோ  பண்ணும். இது  எல்லாத்தையும் மனசுலையே மறச்சு வச்சிட்டு, சிரமப்பட்டு, கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, இப்படி நெறைய பட்டு, ரெண்டாவது பக்கம் திருப்பும் போது, எங்கம்மாக்கே உரிய எந்த ஆரவாரமுமில்லாத  நடையோட, இருந்தாலும்   நடைல இல்லாத அந்த ஆரவாரமெல்லாத்தையும்  வார்த்தையா கோர்த்து, உன்னையும் கூட்டிக்கிட்டே, என்கிட்ட  வந்த

திருநெல்வேலி டூ கடையநல்லூர்-2

எதுல முடிச்சேன். ஆங்.................... ஆலங்குளம். அது இன்றைய தகவல். நம்ம மெயின் மட்டேர்க்கு வருவோம். இப்படியாக, 1-2-3-4-5, 5-4-3-2-3, 3-4-5.....................................5-2 என்று கியர் கம்பி என் கைகளுக்குள் விளையாடிக்கிட்டு இருந்த  கேப்லையே, கோயில்க்கும் போய் சேர்ந்து, துளசி மாலை எல்லாம் வாங்கி, நடந்து போய்ட்டு இருக்கும்போதே, எதித்தாப்புல ஒரு ஐயர் வந்தாரு. அப்பவே நினைச்சேன். பக்கத்துல வந்த உடனே, grand ஆ confirm ஆகிட்டு. கோவில் நடை சாத்தியா............ச்ச்சு.  பொதுவா, கோவில்க்குன்னு போய்ட்டு நடை சாத்தி இருந்தா, மனசு கஷ்டப்படுறது எல்லோருக்கும் சகஜம் தானே. ஆனா பாருங்க, அன்னைக்கு என்னவோ, ஹப்பா, நடை சாத்திருக்கு, வாங்களேன், சீக்கிரம் வண்டி ய எடுப்போம்னு, பின்னாடி இருந்து யாரோ கூப்பிட்ட மாதிரியே இருந்துது  .யாருன்னு பார்த்தா, என்  மனசு தாங்க. வண்டிய விட்டு வர மனசில்லாம,banot  மேல உக்காந்திட்டு இருந்துது. அடுத்த தடவ, க்ளச்சே இல்லாம வண்டி ஒன்ன தயாரிக்கணும். அது இருக்க போய் தான, பிக்காளி ஆக்சிலரட்டர் ல இருந்து கால் எடுக்க வேண்டியிருக்கு என்று உதார் விடும் அளவுக்கு, திரும்பி வ

திருநெல்வேலி டூ கடையநல்லூர்

சில பேர் இருக்காங்க. நேத்துதான் நியுஜெர்சி போய் நெய்யுருண்ட வாங்கிட்டு வந்தேன். போன  பங்குனிக்கு,  பணாமால பால்கோவா சாப்பிட்டுட்டு இருந்தேன்னு சப்ப மேட்டர்க்கு  எல்லாம் சவுண்ட் விட்டுகிட்டு. ஆனா, எப்படிதான் இப்படி தன்ன பத்தி தானே தம்பட்டம் அடிச்சுக்குறாங்களோ??? தெரியலப்பா.  அதுல பாருங்க, இந்த மாதிரி ஆட்களுக்கு நடுவ ஒரு நாள் ஒரு விடிவெள்ளிய, ஒரு  செந்தாமரைய சந்திச்சேன். ஒரு அகில  உலக மாதிரி பயணமே போய்ட்டு வந்தும்,  அனக்கமே இல்லாம  அமர்ந்துட்டு இருந்தத பாக்கும் போது புழு அரிச்சிட்டு. இப்படியே போனா, ஒருநாள் அத்திப்பட்டின்ற பேரே அகராதில இருந்து அழிஞ்சிடும்னு ஊர் மக்கள் எல்லாரையும் அவரே நச்சரிச்சு வேண்டுகிட்டதால,  அந்த செந்தாமரை, அதே விடிவெள்ளியான, நம்ம மருதாணி, தன்னோட அந்த உள்ளூர் பயண வரலாற்ற உங்கள் முன்னால் சொல்ல விளைகிறார். திருநெல்வேலி தெரியும், அது என்ன கடையநல்லூர்? அது எங்க இருக்குனு பல பேர் அவங்களுக்குள்ளயே   கேட்டுட்டு இருக்கும்போது,  யே............நம்..............நம்ம சிக்குன்குனியா ஊருலா? அத எப்படி மறக்க முடியும்னு அடுத்த நிமிஷமே, உங்க முடிக்குள்ள இருக்க தலைக்க

அம்மாவின் முத்தம் அறுவகைப்படும்

பிறந்தவுடன்   நீ  பதித்த  முத்தம், நினைவில் இல்லை.   நினைவு தெரிந்ததும்,   நீ கொடுத்த முத்தம் அந்த வயதில் புரியவில்லை.  விளையாடி விட்டு  வந்த, வியர்வையை ,  துடைத்து  விட்டு  நீ  தந்த  முத்தம், எச்சிலாய்    துடைக்கப்பட்டது  மீண்டும் . மேல்உதட்டு  ரோமங்கள் ,  இன்னும்  துளிராத  விரக்தியில், உன் முத்த சுகம் ஒன்றும் பெரிதாய்  விளங்கவில்லை. என் முடி முளைத்த கண்ணம் ஒன்றும் ,  உன்  உதட்டு  ரேகைப்  பதிவேட்டிர்க்காக காத்திருக்கவில்லை. இருந்தும், இருவருட தூர தேச பயணத்திற்கு பின்  இன்று அவள் தந்த முத்தத்தில் உணர்கிறேன்   அவள் தந்த அனைத்து முத்தங்களின் அர்த்தத்தை.   மறுபடியும் பிறப்பெடுக்க காத்திருக்கிறேன் ................... உன் முதல் முத்தம் முதல் அறிந்து கொள்ள................... அம்மா.

என்னை அறிந்தால்!!!

பல சில வருடங்களுக்குப பிறகு, சில பல  காரணங்களுக்காக, ஒருவித  தனிமை ல இருந்த எனக்கு, ஒருநாள் துணையா, என்னோட காலேஜ் டைரி  என் கைல கிடைச்சது.  இவ்ளோ நாள் கழிச்சும், ( காலேஜ் முடிச்சு கொஞ்சம் நிறைய நாள் தான் ஆகிட்டு னு சும்மா வச்சிகொங்களேன் ), அவுகள  எடுத்து வாசிக்கப் போறதுக்கு முன்னாடி வர, ரொம்ப நாளா நான் தொலைச்சிருந்த என்னோட அந்த சிரிப்ப, அதே சிரிப்ப, திருப்பி கண்டுபுடிச்சு என்கிட்ட  தர போகுது னு எனக்கு தெரியல.  அன்னைக்கு நான் சிரிச்ச சிரிப்புல தான்  ஒரு  உண்மையான சந்தோஷம் இருந்துது, சந்தோஷமான நிம்மதி இருந்துது, சொல்லபோனா ஒரு நிம்மதி தர்ற உண்மை இருந்துது.  அந்த சந்தோஷத்த இவ்ளோ நாளா எங்க தான் தொலைச்சேன்னு தேடும் போது தான், நான் மேல கூறப்பட்டவைகள மட்டும் தொலைக்கல, என்னையே தொலைச்சிருக்கேன்னு தெரிஞ்சுது. ( என்னை னா, என் குணம் = நல்லதங்காள் அடுத்தாப்புல நல்ல பிள்ள நான் தான்னு  எங்கம்மா என்ன அடிக்கடி சொல்லுவாங்கனு  சொல்ல ஆசை தான். என் மொழி = நண்பர்கள்ட்ட மட்டும் பேசுற அந்த பெயரில்லாத மொழி.  கண்டிப்பா எல்லோரும் பேசிருப்பீங்க.  ofcourse , தமிழ் தான். but, இது தமிழ் லயே கொஞ்சம் d